Tag: Sangamam 2018
சங்கமம் 2018

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தும் சங்கமம் விழா, இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் ஹை ஸ்கூலில் கோலாகலமாக நடைபெற்றது. இது பத்தாவது ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது. மதியம் 12 மணிக்குச் சிறப்புப் பொங்கல் விருந்துடன் தொடங்கிய இவ்விழாவில், மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் மக்கள் பெருமளவில் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். கருப்பட்டிப் பொங்கலுடன் தமிழ் பாரம்பரிய மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய விருந்திற்குப் பிறகு, 2 மணிக்குத் தமிழ் தாய் […]