Tag: Snow blowing
ஸ்னோ அள்ளிப் போட வா!!
மினசோட்டாவில் தனி வீட்டில் வசிப்பவர்களுக்கு, குளிர்காலத்தில் பனி அள்ளிப் போடும் பணியானது, சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றிற்குப் பிறகான முக்கிய அன்றாடப் பணியாகும். அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர்களுக்கும், டவுண்ஹோம் என்றழைக்கப்படும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் வரிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த அரும்பணி ஆற்ற வேண்டிய அவசியமில்லை; நிர்வாகம் நிர்வகித்துக்கொள்ளும். தனி வீட்டு மஹாராஜாக்களுக்கு மட்டுமே இந்த மண்ணள்ளி, மன்னிக்கவும், பனியள்ளிப் போடும் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாயம் என்றில்லை. காசு கொடுத்தால், மலையையே குடைந்து அள்ளிச் சென்று விடுவதற்குக் காண்ட்ராக்ட் இருக்கும் போது, […]