Tag: Tamil
மினசோட்டாவில் தமிழ்க் கல்வி

இருமொழி முத்திரை, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி பாடத்திட்டம், Pro Lingua விருது, மாணவர் உதவித்தொகை, தமிழ் பி.ஏ. என அமெரிக்காவில் தமிழ் கற்கும் மற்றும் கற்க விரும்பும் மாணாக்கர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டிய பல தகவல்களை, இந்த பனிப்பூக்கள் “ஃப்ரீயா பேசலாம்” பகுதியில் மினசோட்டாத் தமிழ்ச்சங்கத் தமிழ்ப்பள்ளியின் (http://www.mntamilschool.org/) இயக்குனரான திரு. பாலமுருகன் அவர்களும், பாடத்திட்ட இயக்குனரான திரு. சிவானந்தம் அவர்களும் விளக்கிப் பேசியுள்ளார்கள். காணுங்கள்… பகிருங்கள்… தொகுப்பு – சரவணகுமரன்
அட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா

நவம்பர் 17, 2019 அன்று ஆல்ஃபெரட்டாவில் நிகழ்ந்தேறிய அட்லாண்டா வாழ் தமிழர்கள் மற்றும் உறவினர்களின் முதல்நூல் வெளியீட்டு விழாவில், பல கண்டங்களைத் தாண்டித் தன் சுவை மாறாது ஓங்கி ஒலித்தது தமிழ். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் முழு ஆதரவுடன் மூன்று நூல்களும், இரண்டு கையேடுகளும் ஒரே சமயத்தில் இவ்விழாவில் அரங்கேறியது பெருமைக்குரியது. முதல் நாள் நடைபெற்ற தமிழ்ச்சங்கத் தீபாவளி விழாவில், திருமதி. ஜெயா மாறன் நூலாசிரியர்களை அறிமுகப்படுத்தி, நூல்களைப் பற்றிய முன்னோட்டத்தை அழகுற அளித்தார். அவர் பேசுகையில், […]
அசௌகரிய வீடு

இலையுதிர் காலத்தில் ஏரிக்கரை மரங்களின் நிறம் மாறுகின்றது. இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறுகின்றன. சில்லென்ற குளிரில் சில புற்களும் உலருகின்றன. ஏரிக்கு அருகே பல குட்டைகளும், வாய்க்கால்களும் உள்ளன. இவற்றில் மிதக்கும் அல்லிப்பூக்களும், அயல் நீர்த் தாவரங்களும் பூத்து ஓய்கின்றன. அல்லிக் கொடிகள் குட்டை மேல் நீர் கடந்து தெரிகின்றன. வட்ட இலைகள் வாடுகின்றன. இது இலையுதிர் கால இறுதியில் குட்டைகளின் தன்மை. நீரில் வளரும் தாவரங்கள் கோடை வெய்யிலில் பெருகும். பின்னர் அடுத்த வருடத்திற்கு உதவும் உக்கல் மண்ணாக […]