Tag: Tutucorin
தூத்துக்குடித் துயரம்
மயானமாகக் காட்சியளிக்கிறது தூத்துக்குடி! ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கத்தை எதிர்த்துத் தொடங்கிய போராட்டம் நூறாவது நாளை எட்டிய நிலையில், தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளிக்கப் பேரணியாகச் சென்ற பொது மக்கள் போலீஸாரால் சுடப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, இன்னும் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 13 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக இணையம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வரும் […]