Tag: Women’s day
மகளிர் தின வாழ்த்துக்கள்

பூமியில் வந்திறங்க, பூதவுடல் வருத்தினாள்! பூரணமாய் வந்தியங்க, பூஞ்சிறகில் வளர்த்திட்டாள்! தீதின்றிப் பிறந்திட்டேன், நன்மைகள் கூட்டினாள்! தீரமுடன் வளர்ந்திட, திண்மைகள் காட்டினாள்! அன்னையவள் பிரிந்தபின் அவளிடத்தை அலங்கரித்தாள்! அன்னியர்கள் அணுகாமல் அருகிருந்து காத்திட்டாள்। அண்ணியர்கள் இல்லம்வர, அரவணைத்தே இணைத்திட்டாள்! அணங்கவளைக் கரம்பிடிக்க, அலங்கரித்தே பார்த்திட்டாள்! தமக்கையும் தன்வழிபோக, தேவதையவள் புகுந்திட்டாள்! தளிர்க்கரத்தால் கல்லிதனைத் தரமான சிலையாக்கினாள்! தலைமையில் எனையேற்ற, தன்னையே ஏணியாக்கினாள்! தரணியில் நானியங்க, தன்னிகரில்லாக் காதலானாள்! பிள்ளைகள் நான்கேட்க, பெண்களாய் உதித்தனர்! […]
சர்வதேச மகளிர் தினம்

மிகச் சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிவிட்டோம். கண்ணைக் கவரும் வாழ்த்தட்டைகளைப் பகிர்ந்து கொண்டாயிற்று; நமக்குத் தெரிந்த பெண்களுக்கும், ஊடகப் பொதுவெளிகளிலும் மனதை வருடும் வாசகங்களுடன் ‘மகளிர் தின வாழ்த்துகளை’ப் பதிவு செய்தாகிவிட்டது. நான் பெண்களை மதிப்பவன் என்று சட்டையில் அடையாள வில்லை குத்திக் கொண்டு அடுத்த வருட மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை மற்ற உலக வழக்குகளில் கவனம் செலுத்தலாம். ‘நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து பாதுகாப்பாக சென்று வர முடிகிறது என்றால் […]