\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல்(Wisconsin State Capitol)

விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல் – தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

  1. நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை கட்டிடம் இருந்தாலும், கட்டுமான அழகு அனைத்திலும் இருப்பதில்லை. குறிப்பிட்ட சில பேரவை மாமன்றங்களே, பார்வைக்கு அழகாக இருக்கின்றன. அதில், விஸ்கான்சின் (Wisconsin) மேடிசனில் (Madison) இருக்கும் பேரவை கட்டிடம், புகழ் பெற்ற ஒன்றாகும்.
  2.  பூசந்தி (Isthmas) எனப்படும் இரு நீர்பரப்புக்கு இடையேயான நிலப்பரப்பில் இருக்கும் ஒரே பேரவை இது தான்.
  3. விஸ்கான்சின் மாநிலத்தின் தலைநகரான மேடிசனின் மத்திய புள்ளியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
  4. இக்கட்டிடத்தின் குவிமாடம் (Dome) தான், அமெரிக்காவில் இருக்கும் பேரவை கட்டிடங்களில் இருப்பதிலேயே பெரியது.
  5. பளிங்குக் கற்களில் தொல்லுயிர் எச்சங்களாகிப் (Fossil) போன நட்சத்திர மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களை, இக்கட்டிடச் சுவர்களெங்கும் காணலாம். இவற்றைத் தேடிப் பிடிப்பதையே ஒரு விளையாட்டாக இங்கு விளையாடலாம்.
  6. வாஷிங்டன் டிசியில் (Washington DC) இருக்கும் ஆப்ரகாம் லிங்கனின் சிலையை வடிவமைத்த டேனியல் ப்ரஞ்ச் (Daniel French) என்ற சிற்பி தான், இந்தப் பேரவைக் கட்டிடத்தின் மேலிருக்கும் விஸ்கான்சின் தேவி சிலையை வடிவமைத்தார்.
  7. பேரவை மன்றத்தில் இருக்கும் நாற்காலி எண்ணிக்கை, அங்கு இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒன்று அதிகமாக இருக்கும். யாரும் உட்காராத அந்த நாற்காலியைப் பற்றி, அங்கிருக்கும் உறுப்பினர்களிடையே ஒரு அமானுஷ்யக் கதை பேசப்படுகிறது.
  8. மேடிசனில் இருக்கும் உயரமான கட்டிடம், இந்தப் பேரவை மன்றக் கட்டிடம் தான். இதை விட உயரமான கட்டிடம் கட்ட மேடிசனில் தடைச் சட்டம் உள்ளது.
  9. இந்தக் கட்டிடத்தில் இருக்கும் எந்தப் பகுதியையும் சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு எந்தத் தடையும் இல்லை. “கதவைத் தள்ளிப் பாருங்க. திறந்தா உள்ளே போய்ப் பாருங்க” என்ற அளவில் சொல்லி அனுப்புவார்கள்.
  10. இக்கட்டிடம் இவ்வருடத்துடன் நூற்றாண்டுக் கண்ட கட்டிடம் என்ற பெருமையைப் பெறுகிறது.

Madison Capitol

 

  • சரவணகுமரன்

 

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad