ஜெயலலிதா ஒரு புதிர்
இடமிருந்து வலம்
- ஜெயலலிதா பிறந்த சிற்றூர் (5)
- ஜெயலலிதா தாயாரின் இயற்பெயர் (5)
- முதன் முதலில் ஜெயலலிதா போட்டியிட்ட சின்னம் (3)
- எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அவர் நடித்த முதல் படம். (10)
- ‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ என்ற பாடல் இடம் பெற்ற, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம். (4)
- சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டுத் தோற்ற ஒரு தொகுதி. (4)
- ஜெயலலிதாவால், கல்கியில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நாவலாக வெளிவந்த நூல். (8)
வலமிருந்து இடம்
- ஜெயலலிதா பரதநாட்டிய மங்கையாக சிவாஜியுடன் சேர்ந்து நடித்த படம். (இவர்கள் இணைந்து நடித்த 17 படங்களில் தோல்வியைத் தழுவிய ஒரே படமிது). (9)
மேலிருந்து கீழ்
- ஜெயலலிதாவின் இயற்பெயர் (6)
- உக்ரைனின், பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு ஜெயலலிதாவுக்கு வழங்கிய உயரிய விருது. (6)
- ஜெய்சங்கருடன் இவர் சேர்ந்து நடித்த இரண்டாவது படம். (இவர்கள் இணைந்து நடித்த முதல் படத்தின் தலைப்பு ஒரேழுத்து மட்டுமே கொண்டிருந்தது. இரண்டாவது படத்தின் தலைப்பு அதன் நீட்சியாக வைக்கப்பட்டது). (3)
- ‘அம்மா என்றால் அன்பு’ என்று சொந்தக் குரலில் ஜெயலலிதா பாடி நடித்த படம். (ஆறெழுத்து கொண்ட படம் ஒற்றை இழந்து நிற்கிறது) (5)
- ஜெயலலிதாவின் நூறாவது திரைப்படம். (8)
- ஜெயலலிதா நடித்த ஒரே ஹிந்தித் திரைப்படம். (3)
- இவரை மனப்பூர்வமாக விரும்பியதாக ஜெயலலிதாவே குறிப்பிட்ட ஒருவர். (5)
கீழிருந்து மேல்
- ஜெயலலிதா முதன் முதலில் நடித்த (ஆங்கிலப்) படம். (4)
- ஜெயலலிதாவின் முதல் தமிழ்ப்படம். (6)
- எம். ஜி. ஆர். பாசமாக ஜெயலலிதாவை இப்படி அழைப்பார். (3)