\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

டொனல்ட் ஜான் டிரம்ப் 45வது அமெரிக்க அதிபர்

Filed in இலக்கியம், கட்டுரை by on November 9, 2016 0 Comments

djt_45th_prez_1_620x431அமெரிக்காவின்  45வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனல்ட் ஜான் டிரம்ப்  பனிப்பூக்கள் குழுவின் சார்பில் அவருக்கு எமது உளங்கனிந்த வாழ்த்துகளைச் சமர்பிக்கின்றோம்.

இரண்டாண்டுகளுக்கு முன்னரே முழு நேர அரசியலில் நுழைந்த அவர், பலவித ஹேஷ்யங்களைப் பொய்யாக்கி,  விரைவில் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.

பல பரபரப்புகளுக்குப் பின்னர் அதிபர் தேர்தலில் வென்றது அவரது முதல் வெற்றிப் படியென்றே சொல்ல வேண்டும்.  வர்த்தகம், தொழில் நுட்பம்,  கல்வி, மருத்துவம், வாழ்க்கை முறை, விஞ்ஞானம், விளையாட்டு என இன்னும் ஏராளமான துறைகளில் உலக நாடுகள் பலவற்றுக்கும் முன்னுதாரணமாக விளங்கும், 240 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட, அமெரிக்க நாட்டைப் பேணிப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இனி அவருக்குள்ளது.

மக்கள் அளித்துள்ள ஆதரவின் உந்துதலில், டொனல்ட் டிரம்ப், சீரிய முறையில் செயலாற்றி அமெரிக்க நாட்டின் பாதுகாப்பும் வளமும் மேலும் சிறப்புற வழிநடத்திச் செல்ல வாழ்த்துகிறோம்.

 

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 1

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 2

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 4

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 5

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 6

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 7

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 8

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 10

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad