\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பகுத்து ஆராய்தல் வல்லமை

முக்கிய குறிப்பு :இது உங்களிற்கு ஏற்கனவே அறிந்து கொண்டுள்ள ‘ தெரிந்து கொண்டுள்ள அறிவியல் தகவல்களைத் தவிர்த்து – தரப்பட்டுள்ள தகவல்களை மாத்திரம் உபயோகித்து, பகுத்து அறிந்து, ஆராய்ந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முனையவும்.

கீழே உள்ள கூற்றுக்களை நீங்கள் அடிப்படை என்று எடுத்துக் கொண்டால் அதை வைத்துக் மிகுதித்தரவுகளில் உண்மையானது எது என்று கூறவும்.

உதாரணம்:

தானியங்கள் எல்லாம் புல் விதைகள் . நெல்லு ஒரு தானியம்.

ஆகவே,

(1) தானியங்கள் எல்லாம் நெற்கள்.

(2) நெற்கள் யாவும் புல் விதைகள் .

(3) நெற்களில் சில புல் விதைகள்.

இதே போன்று கீழுள்ள கோட்பாடுகளை ஆராய்ந்து பதில் தரவும்

அ . பறவைகள் யாவும் பறப்பன. சேவல் ஒரு பறவை.

ஆகவே,

(1) பறவைகள் யாவும் சேவல்கள்.

(2) சேவல்களில் சில பறக்கும்.

(3) சேவல்கள் யாவும் பறப்பன.

ஆ. பண்ணைப் பால் மாடுகளின்  பிரதான உணவு வைக்கோல் ஆகும்.

ஆகவே,

(1) வைக்கோலை உண்பன பால் மாடுகள்.

(2) பால் மாடுகள் வைக்கோலை மாத்திரமே உண்பன .

(3) பண்ணைப் பால் மாடுகள் வைக்கோலை மாத்திரம் தான் உண்பவையல்ல.

இ. உரத்துப் பேசுவபவர்கள் யாவரும் கொடியவர் அல்ல. உலக சரித்திரத்தில் சர்வதிகாரி ஹிட்லர் என்பவன் கொடியவன்

ஆகவே,

(1) சர்வதிகாரி ஹிட்லர் உரத்துப் பேசவில்லை.

(2) சர்வதிகாரி ஹிட்லர் சில சமயம் உரத்துப் பேசினான்.

(3) சர்வதிகாரி ஹிட்லர் உரத்துப் பேசிக் கொடியனவும் செய்தான்.

ஈ. மாநிலத்தில் நீர் தேங்கும் இடம் எல்லாம் ஏரிகள், ஏரிகள் யாவற்றிலும் நீர் உண்டு,

ஆகவே,

(1) நீர்த்தேக்கங்கள் சில ஏரிகள்.

(2) சில நீர்த்தேக்கங்களில் நீர் உண்டு.

(3) ஏரிகள் யாவும் நீர்த்தேக்கங்கள்.

உ. செயின்பால் நகரம் மினியாப்பொலிஸ் நகரிற்கு கிழக்கே உள்ளது. தண்டர்பே, கனடா நகர் செயின் பால் நகரிற்கு வடக்கில் உள்ளது,

ஆகவே,

(1) செயின்பால் நகர் தண்டர்பே, கனடாவிற்குத் தெற்கில் உள்ளது.

(2) செயின் பால் நகரிற்குத் தெற்கே தண்டர்பே கனடா நகர் உள்ளது .

(3) மினியாப்பொலிஸ் நகருக்கு வடக்கே தண்டர்பே நகர் உள்ளது,

ஊ. கானம் பாடிப் பறவைகள் முட்டை போடும். ஏரியில் வாழும். பீவர்கள் குட்டி போட்டுபவை.

ஆகவே,

(1) பீவர்கள் பறவைகள் அல்ல.

(2) சில பறவைகள் குட்டி போடலாம்.

(3) பீவர்களும் ஒரு வகைப் பறவைகள் தாம்.

தொகுப்பு – யோகி

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad