\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்க நன்றி நவிலல் நாளும் அதன் சரித்திரமும்

ஆண்டுகள் புரண்டு ஓட ஆளுபவர், நாடுபவர், நடுவில் திளைத்தவர் எனப் பல்வேறு மக்களும் தமக்கென வழிமுறைக் கதைகளை உருவாக்கிக் கொள்ளுவர்.

ThanksGiving_620x556வரலாறுகள் பெருமளவில் வெல்பவர்களால் எழுதப்படுபவை. இவையே காலகாலத்தில் சமூக இதிகாசங்களாக மாறுகின்றன; மேலதிக சிந்தனையின்றி நடைமுறை உண்மைகள் என்றும் திரிபுற்று மாறுகின்றன. ஆயினும் வரலாற்றுத் தகவல்களை தொடர்ந்தும் ஆய்வு செயப்பட்டு இது ஒரு சாரார்க்குச் சாதமானதோ இல்லையோ அடிப்படை உண்மைகளை பன்முனை ஆய்வு தரவு தகவல்கள் மூலம் வெளிக்கொண்டு வர முனையும். எனினும் சமூகங்கள் அந்தந்தக் காலத்தில் இருந்து பெறப்பட்ட பல்வேறுபட்ட தகவல்களில் இருந்து பலவிதமாகவும் தமக்குச் சாதகமாக உபயோக்க முனைவதும் இயல்பான தன்மையே.  சமூகச்சரித்திரக் கதை சொல்லும் பலரும் தாம் புதியவர்களை எவ்வாறு எதிர் கொண்டனர், தொடர்புற்ற போது எவ்வாறு பழகிக்கொண்டனர் என்பது பற்றித் தமது சந்ததிகளுக்கும் கூறிக்கொண்டனர். அவர்கள் எவ்வாறு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் என்பதும், அவர்கள் விட்டுச் சென்ற சூழல் தடயங்கள், அவர்கள் சந்தித்த மற்றய சமூகத்தினர், மற்றும் அவர்கள் சுய நிர்ணயிப்புக் கதைகளையும் கொண்டு ஆய்வது மூலம் புதிய தெளிவுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வகையில் அமெரிக்க நாட்டு நன்றி நவிலல்நாள் எப்போதிருந்து கொண்டாடப்பட்டது என்று எடுத்துப் பார்த்தால், அது “வம்பனோக்” பூர்வீக வாசிகளும், பிளிமித் றோக் எனப்பெடும் குடியேறிகளுக்கும் இடையே நடைபெற்ற அறுவடைத் திருநாள் என்பதும், அதில் இருந்துதான் இந்தக் கொண்டாட்டம் வந்தது என்பதும் சரியான சரித்திரம் அல்ல என்கிறது மாசசூசெட்ஸ் மாநில அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று நூதனசாலை Plimouth Plantation a living-history museum in Massachusetts.

அமெரிக்க நாட்டில் 1860 முதல் 1863 வரை ஏற்பட்ட மிகக் கடுமையான உள்நாட்டுப் போருக்குப் பின், அரசு சாசனங்களின் படி, நவம்பர் மாதக் கடைசி வியாழன்அரச விடுமுறை என்று தாபிக்கப்பட்டது .

நன்றி நவிலல் நாளானது 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் குடியேறியவர்களால் (பிரதானமாக ஐரோப்பிய குடியேறிகளினால்) அறுவடைக் கொண்டாட்டமாக உருவாக்கப்பட்டது. இது 1620 இல் ஆரம்பிக்கப்பட்டது என்பது சரியல்ல என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள் . அதிகாரப்பூர்வமாக இல்லையென்றாலும் அமெரிக்க நாடு முழுவதும் முதன் முறையாக நன்றி நவிலல் கொண்டாடப்பட்டது 1777 இல், பிரித்தானியக் குடியாட்சியாளரை – அமெரிக்கப் புரட்சித் துருப்புக்கள் வென்ற போதேயாகும்

அமெரிக்க சனாதிபதி திரு ஆபிரகாம் லிங்கன் அவர்கள், நன்றி நவிலல் நாளை போரில் மரித்தவர்கள் மற்றும் நாட்டுக்குச் சகலவித அர்ப்பணிப்புக்களையும் செய்தவர்களுக்கு நன்றி சொல்லி, அமைதியாக இறை வழிபாட்டுத் தியானத்துடன் ஒருவரோடு ஒருவர் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நாளாகப் பிரகடனம் (கீழே உச்சாந்துணை 3) செய்தார்.

history_of_thanks_giving_620x426

நன்றி நவிலல் நாள் கதைகளில் 1620களில் தொடுக்கப் பட்ட சில வம்பனோக் பூர்வீக வாசிகள் வரலாற்றுக் குறிப்புக்கள்

  • வம்பனோக் Wampanoag என்பது “ஒளியில் இருந்து வந்த மக்கள் “, அல்லது “கிழக்கு மக்கள் “ என்று பூர்வீக வம்பனோக் மொழியில் பொருள்படும்
  • இந்தக் காலகட்டம் பனிக்காலம் வரை இருக்கும் கீப்புனுமுக் அறுவடை காலம் என்று பூர்வீக மக்கள் சொல்லிக் கொள்வர்
  • 12,000 ஆண்டுகள் பூர்வீக வாசிகள் வாழ்ந்த இடத்தின் பெயர் பற்றசெட் (Patuxet). இவ்விடம் இங்கிலாந்தில் பிளிமித் எனும் பிரதேசத்தில் இருந்து குடியேறியவர்களால் புதிய பிளிமித் றொக் என அழைக்கப்பட்டது
  • வம்பனோக் மக்கள் பேசிய மொழி வாப்பநாக் (Wopanaak) எனப்படும். இந்த மொழி தமிழ் இலக்கணத்தில் உள்ள எழுவாய் செயற்படுபொருள் போன்றில்லாமல் சில இணைப்பு நுணுக்கங்களைக் கொண்டது
  • வாப்பநாக் மொழியின் தத்துவம் தமது ஆழல், சுற்றாடல் , உறவுகளை, வம்சாவழிகளை பிரதானமாக்கி சம்பாசணை செய்யும் பிரயோக மொழி .
  • வாப்பநாக் மொழி ஒவ்வொரு விவரப்பிலும், உச்சரிப்பிலும் நீண்டு பேசுபவருக்கும், கேட்பவருக்கும் எவ்வாறு பேசப்படும் தகவல் இணையும், சொந்தம் கொண்டாடும் என்ற சமூகவியல் அடிப்படையை நிர்ணயித்து உருவாக்கப்படும்
  • வாப்பநாக் மொழியில் பூர்வீக குடில்கள் வேடு (Wetu) என அழைக்கப்படும் . இது தமிழில் நாம் வசிக்கும் இடம் வீடு என்று கூறுவது போல் தொனிக்கிறது.
  • உணவுகளில் கடல் உணவுகள்,காட்டு மாமிசங்கள், தவிர பிரதான உணவுகள் சோளம், அவரை விதை, பூசணிக்காய் போன்றவை ஆகும். இன்னும் அமெரிக்க நீயூ இங்கிலாந்துப் பிரதேசங்களில் உட்கொள்ளப்படும் சோளம், அவரை சேர்ந்த கஞ்சி, களியுணவு சுகராஷ் (sukatash) வாப்பநாக் மொழியை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும்.

உச்சாத்துணைகள் :

  1. Of Plymouth plantation 1620-1647, by William Bradford, edited by Samuel Eliot Morison (1952)
  2.   Three visitors to Early Plymouth, edited by Sydney v. James (Plimouth Plantations, 1963)
  3.  Abraham Lincoln: “Proclamation 118—Thanksgiving Day, 1864,” October 20, 1864. Online by Gerhard Peters and John T. Woolley, The American Presidency Project. https://www.presidency.ucsb.edu/ws/?pid=69998.

தொகுப்பு – யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad