இலங்கை பற்றீஸ் பணியாரம்
பற்றீஸ் பணியாரமானது இலங்கை, மற்றும் மலையாளக் கிறிஸ்தவ குடும்பக் கலாச்சாரங்களிற்குப் போர்த்துக்கேயரினால் அறிமுகமானதாக கருதப்படுகிறது.
இது தென் அமெரிக்காவில் வாழைக்காய் சேர்த்து எப்பனாடாஸ் என்றும் மாறியிருக்கலாம்
தேவையானவை
வெளிப்பாகம் செய்வதற்கு
1 lbs இறாத்தல் கோதுமை மா
8 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்
2 தேக்கரண்டி உப்பு
தேவையான அளவு மிதமான வெந்நீர்
உள்ளடக்க கறி
1 Ibs இறாத்தல் உருளைக்கிழங்கு – அவித்து மசித்துக் கொள்ளவும்
½ lbs இறாத்தல் லீக்ஸ் Leeks
10-12 சின்ன வெங்காயம் உரித்து நறுக்கியது
8-10 உன்னிப் பூண்டு நகல்கள் தட்டி எடுத்தக் கொள்ளவும்
2 மேசைக்கரண்டி அரைத்த வெந்தயம்
1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்
2 மேசைக்கரண்டி மிளகாய்த்தூள்
1 ½ எலுமிச்சை சாறு
3 மேசைக்கரண்டி உப்பு
தாளியில் பொரிக்க, தேவையான அளவு சமையல் எண்ணெய்
செய்முறை
பற்றீஸ் பணியாரத்தின் வெளியுறையை அமைக்க கோதுமை மா, உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கோப்பை வெந்நீர் விட்டு, மிருதுவாக, கையில் வைத்து அழுத்தித் தட்டும் தன்மை வரும் வரை பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து தட்டையான மேசையில் துப்பரவான பிரதேசத்தில் மேலதிக மாவைத் தூவி தொடர்ந்து 5 நிமிடங்கள் பிரட்டிப் பிசைந்து (kneading) கொள்ளவும். பின்னர் 1 மணித்தியாலம் மூடி வைக்கவும்.
உருளைக்கிழங்குகளை தண்ணீர் விட்டு சுமார் 10 முதல் 20 நிமிடங்கள், அவை மெதுவாக வரும் வரை அவித்து நீர் வடித்து இறக்கவும். அடுத்து தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி டெுத்துக் கொள்ளவும்.
சீரகத்தை சற்று வறுத்து அம்மியில் தட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து தாழியில் எண்ணெய் விட்டு குறைத்த சூட்டில் சீரகம், உள்ளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, குத்தித் தூள் ஆக்கிய வார்மிளா காயத்தூள், மற்றும் மஞ்சள் இட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து பொரித்த கூட்டினுள் வெங்காயம் இட்டுப் பொன்னிறமாகத் தாளித்து அதனுள் நறுக்கிய லீக்ஸ் போட்டு ஒரு சில நிமிடங்கள் பிரட்டி எடுக்கவும்.
அடுத்து அவித்த உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் தட்டி எடுக்கவும். அடுத்து எலுமிச்சை பிழிந்து, கூட்டை கலந்து ஆற விடவும்.
அடுத்து குழைந்த மாவை உள்ளங்கை சிறு வட்டங்களாக தட்டி எடுத்து நடுவே கூட்டுக் கறியை வைத்து கொழுக்கட்டை போன்று ஒரங்களை முள்ளுக் கரண்டியினால் அழுத்தி எடுக்கவும்
அடுத்து கொதி எண்ணெயில் 30 வினாடிகள் வரை பொரித்து இறக்கித் தேனீருடன் பரிமாறலாம்
– யோகி அருமைநாயகம்