\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

என் பார்வையில் இசை மேதை பாலமுரளி

Filed in இலக்கியம், கட்டுரை by on December 11, 2016 0 Comments

balamuralikrishna-3-960-x-346திரு BMK என்ற இசை இமயத்தைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு ஞானமும் தகுதியும் கிடையாது.  ஆனாலும் அவர் மேல் கொண்ட பக்தியும் ரசிக உத்வேகமும் என்னை இவ்வரிகளை எழுத தூண்டுகின்றன.  நான் BMK அவர்களின் பரம ரசிகர்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள்.

லால்குடி பரம்பரை பாலக்காடு மணி பரம்பரை என்பது போல BMK யின் ரசிக பரம்பரை, பெருமையும் தனித் தன்மையும் வாய்ந்தது ஆகும். தேனில் மூழ்கி எழுந்த குரலின் கம்பீரம், கிருதிகளை வழங்கும் பாங்கு, சபையில் அமர்ந்திருக்கும் வசீகரம், ரசிகர்களுடன் அவருக்கு ஒத்துணர்வு (rapport) , எல்லாவற்றிற்கும் மேலாக அவரது படைப்பாற்றல் அவரை இசை உலகச் சக்ரவர்த்தியாகப் பரிமளிக்க வைத்தது. இவையெல்லாம் பாலமுரளி என்ற மேதையின் இசை சார்ந்த பண்புகள் . அவருடைய மனிதநேயமும், நட்பும், குழந்தை உள்ளமும் என்றும் நமது நினைவில் நிலைத்து இருக்கும்.

எனக்கு அப்பொழுது 18 வயது இருக்கும். எங்கள் கல்லூரி விழாவிற்குத் தலைமை தாங்க பாலமுரளி அவர்கள் வந்திருந்தார்.  நான் கடவுள் வாழ்த்து பாடினேன். இதை அடுத்து அவர் தலைமை உரை ஆற்றினார். எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஓர் அஷ்டபதி பாடினார். பின் எங்களுடன் அமர்ந்து நீண்ட நேரம் உரையாடினார். அத்தருணத்தில் என்னிடம் ‘would you like to learn music from me’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். இது எனக்கு ஓர் இனிமையான அதிர்ச்சி\. ஆனால் இந்த வாய்ப்பை அப்பொழுது பயன்படுத்த முடியவில்லை. என்னைப் போன்ற ஒரு மாணவியிடம் பாலமுரளி போன்ற ஒரு மேதை இவ்வாறு கூற எவ்வளவு பெரிய மனது வேண்டும்?

கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு பல சந்தர்ப்பங்களில் அவரைப் பார்க்கவும் பேசவும் எனக்கு வாய்ப்புகள் அமைந்தன. அவர் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகளில் நானும் இருந்தேன். அப்பொழுது நான் அவரை வணங்குவதற்கு முன்னமே அவர் என்னைப் பார்த்து உடனே வணக்கம் தெரிவித்து நான் இருக்கும் இடத்திற்கு அவரே வருவார். அவரது கனிவான அன்பும் அலட்டல் இல்லாத பரிவும் என்னை மெய் சிலிர்க்க வைத்தன.

balamuralikrishna-1-620-x-349 balamuralikrishna-2-jpeg-620x560
அவரது 80 ஆம் பிறந்த நாள் விழா மிக விமரிசையாக சென்னையில் நடைபெற்றது. அந்த விழா ஓர் இசை கூடமாக இருந்தது.
எங்குப் பார்த்தாலும் இசை மேதைகள் இசை பிரமுகர்கள் ரசிகர்கள் இருந்தார்கள். என் கணவர் வெளியூர் சென்றிருந்ததால் நான் மட்டும் அந்த விழாவிற்குச் சென்றேன். அதைக் கவனித்து என்னிடம் ‘ ஜானகிராமன் வரவில்லையா?’ என்று கேட்டார். இத்தனை பேர் இருந்தாலும் கூட்டத்தில் எங்களை அவர் ஞாபகம் வைத்துக்கொண்டு கேட்டது என்னை ஸ்தம்பிக்க வைத்தது.

balamuralikrishna-4-960x754அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரத்தில் வசிக்கும் என் மகள் நிர்மலா ராஜசேகர் ஒரு வீணை இசை மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர். அவர் பாலமுரளி கிருஷ்ணாவிடம் ‘நாத க விபஞ்சி, என்ற விருது பெற்ற பொழுது ஒன்று தோன்றியது. பாலமுரளி கிருஷ்ணா என்ற மேதை வாழ்ந்த காலத்தில் நானும் பிறந்து வாழ்ந்து அவர் இசையை அனுபவித்தது கடவுள் எனக்குத் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று கருதுகிறேன்.

திருமதி சந்திரா ஜானகிராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad