ஏ புள்ள……!!!
கஞ்சிக் கலயம் கொண்டு
கடைக்கண்ணால் எனைக் கட்டி
இழுத்துக் கொண்டு
களத்து மேட்டில் நடந்து
வயக்காட்டுப் பக்கம் போற புள்ள ….!
கட்டழகு மேனியால் இந்த மாமன் மனதை
களவாடியவளே
வழியில் கள்ளர் பயமிருந்தால்
சொல்லு புள்ள
கள்ளழகராய் ; கட்டிளங் காளையாக
வழித் துணையாக நானும்
வாறேன் புள்ள …!
கண்ணாலே கதை பேசி கயவரைக் காலால் புறந்தள்ளிவிட்டு
கண் நெறஞ்ச மச்சானைக் கண்ணுக்குள்ளே
பூட்டி வைச்சு…..
கருமேகக் கூட்டம் வருமுன்னே
விரசா வீடு வந்து சேர்ந்த புள்ள …!
கண்டாங்கிச் சேலை கட்டி
கக்கத்தில் கூடை கொண்டு நடப்பவளே…
மாமனின் ஒரப்பார்வையாலே ஒய்யாரமாக நடை பயில்பவளே
ஒத்த வார்த்தை சொல்லு புள்ள …!
கண்ணுக்குள் இமையாகக் காத்திடுவேன்
கலக்கமின்றித் தைரியமாகச் சொல்லு புள்ள…
இந்த மாமனைப் பிடிச்சிருக்கா…!!
கருத்த மாமனைப் பிடிச்சிருக்கா…!!!
ஏ புள்ள ….!!
உமையாள்
Tags: love