\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அனுபவ வாழ்க்கை

Filed in இலக்கியம், கதை by on December 25, 2016 8 Comments

வண்டியை  நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த கைப்பையை எடுத்தாள் த்ரிவேணி. கைப்பை அருகில் இருந்த கோப்பையும்  எடுத்துக் கொண்டாள் . அன்றைய நாளை மனதில் ஒட்டிய படி இறங்கினாள் . இன்றைய பொழுது ஒரு புதிய பெண் வந்து வகுப்பில் இணைவதாக, ஒரு வாரம் முன்பே பள்ளி முதல்வர் வேணியிடம் அறிவித்திருந்தார்.

வண்டியைப் பூட்டி விட்டு வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.  கருமையான நிறத்தில் ஒருஃபார்மல்பாண்ட் , வெளிர் நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை. தோள் பட்டை வரை நீண்ட கூந்தலில் பின்னே ஒரு சின்ன கிளிப் போட்டு அலைய விட்டிருந்தாள். முகத்தில் அதிக ஒப்பனை இல்லை, ஆனால் பளிச்சென்ற, மறுமுறை பார்க்கத் தோன்றும் முகம்.  ஐந்தே முக்கால் அடி உயரமான ஒரு கம்பீரம். இயல்பான ஒரு ஆசிரியைக்கு இருக்கக் கூடிய ஆளுமை இருந்தது. அதுவும்  பனிரெண்டு, பதின் மூன்று வயது உடைய மாணவர்களுக்கு மத்தியில் அந்த ஒரு ஆளுமை முக்கியமான அவசியங்களில் ஒன்று.

ஒரு ஐந்து ஆண்டுகளாக அந்த நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு ஆசிரியையாக இருக்கிறாள்.

அவளுடைய இயல்பான “Don’t mess with me” attitude மாணவர்கள் மத்தியில் ஒரு விதமான மரியாதையை அவளுக்குக் கொடுத்து இருந்தது.

இன்னும் பள்ளிப் பேருந்து வருவதற்கு முப்பது நிமிடங்கள் இருக்கிறது. அவர்கள் உள்ளே வருவதற்கு முன் வகுப்பைத் தயார் செய்யத் தொடங்கினாள்.

எடுக்க வேண்டிய நகல்களைத் தயார் செய்து கொண்டாள் . புதிதாக வரும் பெண்ணிற்கான இடத்தை மனதில் குறித்து வைத்துக் கொண்டாள் .

அவள் பெயரை முதலில் படித்த பொழுதே மனதில் இனித்தது  “யாழினி“. என்ன அழகான தமிழ்ப் பெயர்!

பள்ளிப் பேருந்து வரும் ஓசை கேட்டது. உள்ளே வந்து அனைவரும் அமர்ந்தவுடன்,  புதிதாக வந்திருந்த பெண்ணை வகுப்பிற்கு அறிமுகப்படுத்தியாழினிஎன்று பெயர் சொல்லவும், மாணவர்களுக்கு நடுவில் ஒரு சின்னச் சிரிப்பு வந்தது.

அதற்குள் அந்த பெண் “I like to be called Yazhini. யாஸீனிஎன்றாள் .

மனதிற்குள் ஏதோ சுணங்கினாள் வேணி.

உலகின் ஏதோ ஒரு கோடியில் இருக்கிறோம். அமெரிக்காவில் நம்முடைய பெயர்களை அனைவரின் வாயில் நுழைக்க நம்மவர்கள் படும் கஷ்டம் தெரிந்த ஒன்று தான்.

ஹர்ஷிதாஎன்ற ஒரு பெண்ணின் சமஸ்க்ரிதப் பெயர், போன வருடம் அனைவரின் வாயில் என்ன பாடு பட்டது.? “Harsh” என்று அவளை அழைத்தது பொறுக்க முடியாததாக இருந்தது.

நம்முடைய பெயர்கள் அர்த்தமுடையவை அல்லவா? பெயரில் என்ன இருக்கிறது? என்று வெறுமனே சொல்லி விட முடியாது.

நிறைய பேர் தங்கள் பெயர்களை ச் சுருக்கிக் கொண்டார்கள். இல்லை என்றால் சிதைக்கப்பட்டு வேறு விதமாக அழைக்கப்படுகிறது. அதனால் சுருங்குவது எவ்வளவோ பரவாயில்லை

பழனி குழந்தைவேல் ”  PK என சுருங்கியது. த்ரிவேணி யின் பெயர் கூட சுருக்கப்பட்டு மிஸ்.டீ.வீ   ஆகிப் போனாள் .  ட்ரை வெண்ணி (Tri Veni) என்பதற்கு டீ.வீ  பரவாயில்லை.

வேணிக்கு இயல்பாகவே மொழிகள் மீது  பற்று உண்டு.  ஒரு மொழியை அதற்காகவே படிக்க வேண்டும் என்று நினைப்பவள். அதனால் இவர்கள் உதாசீனமான சில உச்சரிப்புகள் கோபத்தையும் , நாகரீகம் கருதி காக்க வேண்டிய அமைதி ஆற்றாமையையும் தரும் .

இங்குள்ளவர்களை ஒன்றும் குறை சொல்ல முடியாது. நம்முடைய பெயர்களில் வரும் சுழற்சி கடினம் தான். ஆனால் பெரும்பாலானோர் முயற்சி கூடச் செய்வது இல்லை போலத் தோன்றும்.

நிறைய நேரங்களில் இந்தச் சிறு பிள்ளைகள் ஆரம்பத்திலிருந்தே அழைக்கப்பட்ட  விதத்தை மாற்றி அழைக்காமல், அப்படியே தங்கள் பெயரை அழைத்துப் பழகி விடுகிறார்கள்.

எந்த மொழியாக இருந்தால் என்ன? அது சிதைக்கப்படுவது வருத்தமானது தான்.

அதிலும் தாய் மொழிபடும் பாடு முடியவில்லை. “விற்கு இணையாக ஆங்கிலத்தில் “zh ” சேர்ப்பதன் காரணமே புரியாத ஒன்று. வேறு சில மொழிகள் ஆங்கிலத்தில் இணையாக வெறும்  Symbols  சேர்த்தது போல, ஒரு புதிய symbol போல் விற்கு உருவகம் கொடுத்திருந்தால்”  சரியாக உச்சரிக்க முயற்சியாவது நடந்திருக்குமோ? இல்லை ழ்வின் தனித்துவம் புரிந்திருக்குமோ?

சிந்தனை ஓட்டம் நிற்கவில்லை வேணிக்கு ஆனால் வகுப்புத் தொடங்கியது. வழக்கமான நாளாகவே கழிந்தது. ஒவ்வொரு முறையும் யாஸினி என்று அழைப்பது மட்டும் சகிக்க முடியவில்லை.

ஆனாலும் டீன் ஏஜ் வயது மாணவர்களிடம் அதிகம் வாதிட்டால் மரியாதை குறையும் என்று உணர்ந்தவள் வேணி. அதனால் யாஸீனி என்று அழைக்கத் தொடங்கினாள்.

மனதின் உறுத்தல் மட்டும் குறையவில்லை.

       ******

வகுப்பின் இடையில் பயிற்சிக்காக வந்திருந்த ஒரு ஆசிரியைக்கு வழி காட்டுதல்கள் அளித்துக் கொண்டிருந்தாள். இந்த ஆசிரியை வாரத்தில் ஒரு சில மணிநேரங்கள் கண்காணித்து, அதைக் கொண்டு தன்னுடைய பயிற்சியை முடிக்க வேண்டும். அவளும் ஒரு இந்திய வம்சாவளிப் பெண் தான். ஆனால் இங்கேயே பிறந்து வளர்க்கப் பட்டவள் எனத் தோன்றும் வேணிக்கு. நாவடக்கம், நாகரீகம் இரண்டும் தெரிந்ததால் அவளிடம் வெறும் பயிற்சி குறித்து மட்டுமே பேசுவாள் வேணி.

திடீரென்று இன்னொரு ஆசிரியை ஜென்னி உள்ளே நுழைந்தாள் . அவளுக்குக் கொஞ்சம் வாய் நீளம். வரும் பொழுதேசீ சீஎன்று புலம்பியபடியே வந்தாள் .

“Don’t take it offensive T.V, But Why do Indian parents always compare their children with other children”?

கேள்வியைக் கேட்டாகி விட்டது. அப்புறம் என்ன டோன்ட் டேக் இட் அஃபென்ஸிவ்?” சுறு சுறு வென்று பொங்கியது வேணிக்கு.

இவள் பதில் உரைக்கும் முன், பயிற்சி பெற வந்திருந்த பெண் ,

எஸ் ட்ரு. முக்காவாசி இந்தியப் பெற்றோர் அப்படித் தான்என்று தன்னுடைய 19 வயது அரைவேக்காட்டுக் கருத்தைப் பதிவு செய்தாள்.

உன்னிடம் கேட்டார்களா ? நீ எத்தனை முறை இந்தியா சென்றிருப்பாயடி பெண்ணே உன் குறை குடக் கூத்தாட்டத்திற்கு அளவில்லையா?” என்றெல்லாம் பதில் சொல்லத் தோன்றியது வேணிக்கு .

நாகரீகம் கருதி அமைதியாகப் பதில் உரைப்பது அவசியமாகிப் போனது.

ஆனாலும் வருத்தமான ஒன்று அடுத்து வரும் தலைமுறைக்கு நம்முடைய மொழியிடமோ, வளர்ப்பிடமோ, பாரம்பரியத்திடமோ அறிவும்  இல்லை, மதிப்பும் இல்லையோ ?

எல்லாமாகச் சேர்ந்து சோர்வு அளித்தது வேணிக்கு

    ********

மாலை வீடு திரும்பிய பொழுது மனதின் சிந்தனை வலுப் பெற்றது.

அடுத்த தலைமுறைக்கு  மொழி சிதைந்து தான் போய் விட்டதோ?

மெல்லத் தமிழினிச் சாகும்அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை யுரைத்தான்!

இந்த வசை எனக்கெய்திடலாமோ?

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்கலைச்

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

எட்டு திக்கும் வந்தோம். இங்கு வந்தும் நம் மொழிகளை வளர்க்கிறோம் தான். ஆனால் இன்னும் அடிப்படையாக நம்முடைய பேரைக் கூட தொலைத்து விட்டோமே.

மொத்தமாக இவள் புலம்ப மாறனின் பதில்,

ஒரு பெயரை தவறாகக் கூப்பிடுவதில் என்ன இருக்கிறது வேணி. அதனால identity எல்லாம் தொலையாது“.

ஏன் தொலையாது மாறன். உங்க பெயரை முழுக்க முழுக்க வேற மாதிரிக் கூப்பிட்டு வாழ்க்கை நடத்தறது எப்படி சரியாகும்?

இனியா ன்னு ஒரு பெண்ணிற்கு பேர் இருந்தா .. பொருள் மாறிஈனியாகூப்பிடறதும்,

ஹர்ஷா வை Harsh ன்னு கூப்பிடறதும், பவின்னு ஒரு பெண்ணை பாவின்னு கூப்பிடறதும்,

யாழினி, யாஸினி ஆறதும் அர்த்தம் கொணர்த்தம் ஆகிறா மாதிரி இருக்கே”.

சரி என்ன பண்றது சொல்லு? இந்த ஊர்ல இருக்கிற  எல்லாருக்கும் தமிழ் சொல்லி கொடுக்கவா முடியும்?. அவங்க மனோ நிலைமைக்கு புரிஞ்சிக்கிறது கஷ்டம்.”.

அவங்களக் குத்தம் சொல்றத விட. நம்முடைய அடுத்த தலை முறைப் பசங்க தன்னோட பெயரைத் தவறா தானே நினைச்சிக்கிறாங்க

அது அவங்க அவங்க வளரும் முறையும், பெற்றவர்கள் வளர்க்கும் முறையும் பொறுத்து வேணி”.

நம்ம தலைமுறை  மொழியையும் , வாழ்க்கையையும் , கலாச்சாரத்தையும் கத்தரிச்சுட்டு வந்து இங்கு வந்து என்னவோ பண்ணிட்டு இருக்கோம். அதனால நம்ம மட்டும் இல்ல, ஒரு சந்ததியின் வாழ்வாதாரமும்,அடிப்படையும் போயிடுச்சே.”.

கலாச்சாரமும், மொழிகளும் எந்த ஊர்ல இருந்தாலும் விருப்பம் உள்ளவங்க மனசுல தான் வரும்“.

அப்படி இல்ல மாறன் ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு, It takes a village to raise a child ன்னு. நம்ம விருப்பத்தை தாண்டி சுற்றி இருக்கிறவர்கள் மனோ நிலையையும், பேசும் முறைகளும், நடக்கும் முறையும் தான் குழந்தைகள் வளர்வதற்கு அடித்தளமாக இருக்கு. நம் அடுத்த தலைமுறைக்கு நாம்  கொடுக்கறது என்ன,  நம்ம செய்யறது எல்லாமே தவறு தானே மாறன்“.

வேணியின் ஆதங்கத்துக்கு முதல் முறையாக கையை அழுத்தி ஒரு முதிர்ச்சியான விளக்கம் கொடுத்தான் மாறன்.

அந்தப் பெண்ணின் பெற்றோர் யாழினி என்று வைத்தாலும், அந்தப் பெண் ஒரு வயதிற்குப் பிறகு , அதைப் புரிந்து தன்னுடைய மொழியை உணர்ந்தால் மட்டுமே அது சரியாக அழைக்கப்படும்

நீ சொல்வது மாதிரி நாம் செய்வது எல்லாமே தவறு என்றோ சரி என்றோ முடிவு செய்ய முடியாது..

இது தான் சரி. இது தான் தவறு என்று சொல்லக் கூடியது இல்லை வாழ்க்கை. ஒரு அனுபவ விடுகதையாகிப் போய் விட்டது. ஒவ்வொரு அனுபவமும் விடுகதை தான். விடைகள் பல உண்டு. சில விடுகதைகளுக்கு விடைகளே கிடைக்காமல் கூடப் போய் விடலாம்.

உனக்கு வேண்டிய விடைகளைத் தேடுவது மட்டுமே நீ செய்யக் கூடிய ஒன்று.

மொழிகளை நன்கு கற்றுத் தெளிவதும் அது போலவே ஒரு அனுபவம். நீ உணர்வதை, புரிவதை, எல்லோரும் புரிய வேண்டும் என நினைப்பது தான் தவறு. ஒவ்வொருவரின் மனோ நிலைக்கு ஏற்பவே அவர்கள் அனுபவமும் அமையும்.  

நான் சொல்றது புரியுதா. தேவை இல்லாம மனசை போட்டுக் குழப்பிக்காத”.

ஏதோ புரிவது போல இருந்தது வேணிக்கு.

  • லக்ஷ்மி சுப்பு

 

Comments (8)

Trackback URL | Comments RSS Feed

  1. Vinod says:

    அருமையான கதை/கட்டுரை !!!

    1) யாழினி should have been spelt Yalini – then it will be pronounced better – if English people wrote ழ as zh why do we need to follow ? letter l is closer in sound to ழ than zh – other country people will not understand this – only we need to rectify – btw i write மழலை as Malalai and தமிழ் as Tamil

    2) Local americans not only can’t pronounce Indian names but also many of their friend’s lastnames (if it is not simple english words) – the problem is screwed up English language not people – but without trying some people for the heck of it ask “how to pronounce your name ?”

    வினோத்

    • Lakshmi Subu says:

      Thanks for your comments and thoughts on this vinod. But even having ‘l’ for ழ is not justified. May be we should consider having separate symbol for denoting our ழ.. The story is kept in neutral tone to help the readers understand that learning and enjoying a language is always an experience and not everybody experiences the same. But One thing we should make sure is to have the next generation value the language and emphasize our pronunciation.

  2. Anand says:

    Very well narration of how ppl feel shy and cut short their name so others can Calk . One of the friend name is sampath and people here call him Sam.

  3. VP says:

    Good one Lakshmi. It does take patience n persistence to make others pronounce our names right. I’ve seen fellow colleagues Mexican names being pronounced correctly. Ex: Eugenio is pronounced ‘ayehanyio’ and Pedro as ‘paedhro’. All we have to do is be persistent and help others pronounce our names. Americans are far more open minded than we credit them for, provided we have true determination to not ‘shrink’ mispronounce our names

  4. சுந்தரமூர்த்தி says:

    வி(டை)தையே விடையாக முளைத்து நிற்கும்!

    மனித இயல்பு!!!
    எதிர்பார்த்த விடை நல்ல அனுபவமாகவும்
    எதிர்பார்க்காத விடை கெட்ட அனுபவமாகவும் கொள்ளப் படுகிறது
    வாழ்க்கையில் சந்திக்கும் அத்தனை அனுபவமும் விடுகதையே! இங்கு
    விடையை முடிவு செய்தே விடுகதையை எதிர்கொள்கிறோம்!
    எத்தனை பேர், எதிர்பார்க்காத விடைக்கான நல்ல அனுபவமாகக் கொள்ளக் கூடியவர்கள்!!

    ஆனால் மொழி சார்ந்த அனுபவத்தில் அயலவர்களை விடுத்து அயலகத்தில் உள்ள நம்மவர்கள் மற்றும் அடுத்ததலைமுறையில்
    இருப்பவர்களைப் பார்த்தாலே போதும் என்பது என்கருத்து. தமிழ் மொழி உச்சரிப்பில் அல்லது ஒதுக்குவதில் நம்மவர்கள் செய்யும் செயல் முகம் சுளிக்கத்தான் செய்கிறது.
    இருமொழிக் கொள்கையில் அயலவர்களின் புரிதலும், தரும் ஆதரவே போதுமானது என்பேன்!

    மொழி மேல் நாம் பற்று கொண்டது எதோ நமது வாழ்வில் நேரடியான அல்லது மறைமுகமான
    அனுபவம் வாயிலாக நமக்கு கிடைத்த ‘நல்ல’ விடையே! அந்த விடையை மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவர்கள் அந்த விடுகதையை/அனுபத்தை/தேவையை அடையும் வரை அதன் பலன் புரியப்போவதில்லை.

    உதாரணமாக ஏதோ ஒரு காரியம் செய்யும் போது எங்கிருந்தோ நாமே பேசும் ஒலி கேட்கும் “ச்சே இதத்தான
    என் பாட்டி/தாத்தா/அப்பா/அம்மா/ஆசிரியர்/நண்பன் சொல்லிட்டே இருப்பார் இப்பதான் புரியுது! இதுவே வாழ்வியல் அனுபவ விடை!

    முடிந்தமட்டும் நமது தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் நாம் கண்டெடுத்த (அனுபவ) விடுகதைக்கான வி(டை)தையை விதைப்போம்,
    அவர்கள் முன் விடை என்னும் பயிர் முளைக்கும் போது நாம் வந்து நிற்போம், உருவமாய் அல்ல! அவர்களின் கண்ணீர் துளிகளாய்!!

  5. Lakshmi Subu says:

    Thank you for the comment

  6. Lakshmi Subu says:

    Thank for the detailed comment Sundar. Words from the wise. Very thought provoking.Thank you again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad