\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

திருமலை  திருக்கோணேச்சரம்

தக்கிண பூமி எனப்படுவது நவீன அரசியல் எல்லைகள் தாண்டிய தமிழர் பூமியைக் குறிப்பிடும் .  இதில் தற்போதைய தென்னிந்தியப் பிரதேசமும் குறிப்பாகத் தமிழ்நாடும், இலங்கை தீவும் சேர்த்து கடல் மேற்காணப்படும் நிலப் பரப்பைக் குறிக்கும்.

தமிழர்கள் வழிபாட்டில் சிவன் வழிபாடு தொன்மை வாய்ந்தது. பண்டய ஈசன் வழிபாட்டுத் தலங்கள் தக்கண ஈச்சரங்கள் என்று அழைக்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் திருக்கோணேச்சரமாகும்.

இலங்கையின் வடகிழக்குக் கரையில் பாறைமுனையில் வங்காள விரிகுடாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் இடம் திருகோணமலை ஆகும். இவ்விடம் திரிகோணமாக மும்முனையிலும் நீல நெடுங் கடலை எதிர்கொள்ளுவது கோணமாமலையாகும்.

அந்த மலை மீது அமைந்துள்ள தொன்மை வாய்ந்த சிவன் ஆலயமே திருக்கோணேச்சரம். இங்கு அருள் புரியும் சிவபெருமான் கோணேசுவரர், இவ்விடம் உமையாள் – மாதுமையாள் என்ற பெயரைப் பெறுகிறாள். இவ்விடத் தீர்த்தம் பக்தர்களுக்குப் பயன் தரும் பாவநாச தீர்த்தம் எனப்படும் இந்தக் கோவிலின் மகிமை பற்றித் தேவாரம் பாடிய நாயன்மார்களில் திருஞான

சம்பந்தமூர்த்தியும் ஒருவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

நிரைகழ லரவஞ் சிலம் பொலி யலம்பு

நிமலர்நீ றணிதிரு மேனி

வரை செழு மகளோர் பாகமாப் புணர்ந்த

வடிவினர் கொடியணி விடையர்

கரைெகெழு சதுங் காரகிற் பிளவும்

அளப்பருங் கன மணி வரன் றிக்

குரைகட லோத நித்திலங் கொழிக்குங்

கோணமா மலையமர்ந் தாரே.

இதிகாசங்கள் பாரிய சிவபக்தனும் தமிழ் மன்னனுமாகிய இராவணன் அவனது மகத்துவ வாளினால் பாறை வெட்டி சிவலிங்கம் பெற்றான் என்றும் சொல்லும். இந்த ஆழமான,  இரண்டாகப் பிளந்து காணப்பெறும் பாறை இராவணன் வெட்டு என்று  அழைக்கப்படும்.

திருக்கோணேச்சரமானது தொல்காலம் தொட்டு, இராஜ இராஜ சோழன் போன்ற பல தமிழ் மன்னர்களாலும் பேணி வரப்பட்ட ஈச்சரம் ஆகும்.

தொகுப்பு – யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad