\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கல்லறை பேசுகிறது

Filed in இலக்கியம், கவிதை by on January 29, 2017 0 Comments

அன்று
இளம் பெண்களின்
மடியில் புரண்ட நீ
இன்று
மண்ணில் உறங்குகிறாய் !

அன்று
அடிதடியில் இறங்கி
ஆயிரம் வாக்குறுதிகள்
அள்ளி விட்டு
அமைச்சரான நீ
இன்று
மண்ணில் புல்லுக்குக் கீழே
புதைந்து கிடக்கிறாய் !

அன்று
பொன் பொருளை
ஓடி ஓடித் தேடிய நீ
இன்று
புல் முளைத்த
மண்ணில் புதைந்து
என்ன தேடுகிறாய் ?

அன்று
பெண் பொன் பதவிசுகம்
மறந்து மனிதநேயமுடன்
மனிதா வாழ்ந்திருந்தால்
இன்று
நீ மறைந்தாலும்
மலர்கள் தூவிய
மண்ணுக்குக் கீழே
மனித உள்ளங்களிலே
வாழ்ந்து கொண்டிருப்பாய் !

– பூ. சுப்ரமணியன்

பள்ளிக்கரணை, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad