\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நிலவும் வசப்படும்

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !
…….
………
அடி கோயில் எதற்கு ..? தெய்வங்கள் எதற்கு…?
உனது புன்னகை போதுமடி !

ரகு என்கிற ரகுவரன் சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேரந்தவன் . இவனது மனைவி அகிலா . இவர்களுக்கு அனன்யா என்ற ஒரு தேவதை உண்டு . இவன் உயர் ரகக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் உயர் பதவியில் வேலை பார்க்கிறான் . நாள்தோறும் அவனுக்கு வேலைப் பளு அதிகரித்துக் கொண்டே இருந்தது , அவனும் எவ்வளவோ முயற்சி செய்து வெளியில் வரப் பார்த்தான். ஆனால் இவன் திறமைக்கு ஏற்ற வேலை கிடைத்தப்பாடில்லை .

”ந மக்கு இருக்கிற ஒரே சொத்து நம்மிடம் உள்ள திறமை “ தான் என்பதில்அவன் தீர்க்கமாக இருந்தான்.

“ முயற்சி திருவினையாக்கும் “ – என நம்பினான் ரகு. அவன் சோர்ந்து சோஃபாவில் சாயும் பொழுது, தன் சின்னஞ்சிறு பிஞ்சு விரல்களால், செல்ல மகள் அவன் தலையில் வருடும் பொழுது , அவன் பட்டதுயர்கள் யாவும் பஞ்சாய்ப் பறந்து போக, அவளை வாரியெடுத்து முத்தமிடுவான் …!

ஆனந்த யாழை அவன் தலையில் அவள் மீட்டுவதாக உணர்ந்தான் ….
உலகமே தன் காலடியில் இருப்பதாக எண்ணினான், அந்த ஒரு நொடியில்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! அவள் எனக்கு மகளாய்ப் பிறந்திட! நான் தகப்பன் ஆனேனோ அல்ல அவள் என் தாயுமானாளோ? விளங்க முடியாப் புதிரிது…

அவளின் மழலைச் சிரிப்பில் என் பணிச் சுமைகள் பனிக்கட்டியாய் உருகுகிறதே..!

பெண் சக்தியின் உறைவிடம் . என் வாழ்வில் முதலில் ,என் தாயின் வடிவில் உணர்ந்தேன். பின் அவளே என் மகளின் உருவில்! எந்தவிதத் தடைகளையும் உடைத்தெறியும் வல்லமையை, ஏன் இறைவன் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் கொடுத்தான் என நான் எண்ணுவதுண்டு, சில சமயம் …. ஏனெனில் பெண்ணிற்கே பொறுமை அதிகம் என்பதால் தானோ என எனக்குள் நான் சமாதானம் ஆவதும் உண்டு.
ரகு’வின் மகள் அனன்யாவிற்கு , நான்கு வயது. மிகவும் சூட்டிகையானவள். ஒரு தடவை சொல்லிக் கொடுப்பதை உடனே புரிந்து கொள்வதில் மிகவும் திறமைசாலி ….அப்பாவைப் போலவே. இதனாலேயே அவளைஎல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் . ரகுவின் பல கேள்விகளுக்கு அவள் எளிதாகப் பதில் கூறிவிடுவாள்.

ஒரு முறைஅவன் அலுவலகத்தில் இரவு முழுவதும் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு சிறு பிரச்சனையினால் அவன் வேலை முடியாமல் இழுத்துக் கொண்டே போனது. எப்படித் தீர்ப்பது எனத் தெரியாமல் தடுமாறினான். அந்த யோசனையிலேயே வீட்டிற்கு வந்தான்….தனது மகள் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.
அங்கே நடந்த சிறு உரையாடல் :

மகள் : ”டேய், ரவி! நீ செய்தது தான் சரி என நினைத்து இருமாப்போடு இருக்காதே. ஆரம்பத்தில் இருந்து நீ செய்தது சரியா எனச் சிந்தித்துப் பார்”
ரவி : ”எனக்கு எல்லாம் தெரியும் அனன்யா. நீ உன் வேலையைப் பார்.” ,
இந்தஉரையாடல்களைக் கவனித்த ரகுவிற்குஏதோ ஒன்று மண்டையில் சடாலென்று உறைத்தது … அவள் கூறியதில் தான் எவ்வளவு உண்மை ..!!
தான் வேலையில் செய்த தவறும் அவனுக்கு விளங்கியது…தான் செய்ததே சரி என இருந்ததை எண்ணி அவன் வருந்தினான் .

நாட்கள் உருண்டோடின. அவன் எதிர்பார்த்த மாதிரியே சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வோடு கூடிய வேலையும் கிடைத்தது. அவன் திறமை மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையால் தான் அவனுக்கு வேலை கிடைத்ததாக உறுதியாக நம்பினான். அவன் சோர்ந்த பொழுது, அவனுக்கு தோளோடு தோள் கொடுக்க அவன் மனைவியும், அவன் கரம் பிடித்து நடக்க மகளும் உடனிருந்திட, இனி இப்புவிதனில் தான் அடைய வேண்டிய
பேரின்பம் ஏதேனும் உண்டோ என இருமாப்படைந்தான்.

“திறமை மீது நம்பிக்கை வைப்பவன் வாழ்வில் தடம் புறள்வதில்லை என்பது ஆன்றோர் வாக்கு” என ரகு தன் மகளிடம் கூறிக் கண் சிமிட்டினான். அதற்கு அவள், கடவுள் கொடுத்த வரம் நீ அப்பா. உன் கை பிடித்து நடக்கையில் அந்த நிலவு கூட வெளிச்சத்தை நம்மிடம் கடனாகக் கேட்கும் என மின்னல் ஒளிரிட சிரித்தாள்.
நிலவும் வசப்படும் ஒருநாள் … திறமையோடு முயன்றால் …!!

– உமையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad