யாழ்ப்பாண இறால் வடை
தேவையானவை:
- 20-25 கோது உடைத்த இறால்கள்
- 1/2 lbs சிறிய வெங்காயம் – சிறிதாக நறுக்கவும்
- 6 உலர்த்திய செத்தல் மிளகாய் ( dried red chily)
- 2 பச்சை மிளகாய் அரிந்து எடுத்துக் கொள்ளவும்
- 2 நகம் உள்ளிப் பூண்டு
- ½ அங்குலம் இஞ்சி
- 1 lb இறாத்தல் மைசூர் பருப்பு
- ½ தேக்கரண்டி மிளகு – தட்டி எடுத்துக் கொள்ளவும்
- சமையல் எண்ணெய்
- தேவையான உப்பு
செய்முறை:
சுவையான இறால் வடைக்கு நாம் பாவிக்கும் மைசூர் பருப்பினை நன்கு கழுவி 3 – 4 மணித்தியாலங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்,
அடுத்து பச்சை, சிவப்பு மிளகாய்கள், மற்றும் வெங்காயம், இஞ்சி, உள்ளி, கறிவேப்பிலை, மற்றும் மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஊற வைத்த மைசூர்ப் பருப்பை, நீர் விட்டு நன்கு பசையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அரைத்த திரவியங்களையும், பசையையும் நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
குழைத்து எடுத்த மாவை உள்ளங்கையில் சற்று எண்ணெய் பூசி 1 ½ – 2 அங்குல வட்டத் தட்டுக்களாகத் தட்டி, மத்தியில் ஒவ்வொரு இறாலையும் போர்வை போன்று சுருட்டி, முனைகளை விரலால் சிறிது பிசைந்து மூடவும்.
அடுத்து அகலியில் சமையல் எண்ணெய் விட்டு, பொன்னிறம் ஆகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பரிமாறல் மேற்குறிப்பு : சமையல் எண்ணெய் உறிஞ்சும் காகிதத் தாளில் நன்கு வடித்து, விரும்பினால் தேங்காய்ச் சட்டினி, தக்காளி தொக்கு ஆகியவற்றுடன் பரிமாறிக் கொள்ளலாம்
தொகுப்பு யோகி