இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017
மினசோட்டாவிற்கும் அயல் மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதம் மழையும் வந்துவிட்டது இனி மே மாதத்தில் மிருதுவான புற்தரைகளும், பூக்களும் துளிர் விடும். பூச்செடிக் கடைகளுக்குப் போனால் (Garden centers) அப்பப்பா ஆயிரம் ஆயிரம் வகை தாவரங்கள், நமக்கு இருப்பதோ குறுகிய நிலமும் பூச்சாடிகளும் என்பர் இவ்விட வாழ் தமிழ் இயற்கையாளர் பலர்.
மினசோட்டா , ஒன்ராரியோ கனடா விவசாய திணைக்களம், மற்றும் பூங்கா அமைப்பாளர் குழுமியங்கள் வருடா வருடம் புதிய, அனுபவமுள்ள பூச்செடி, காய்கறி வளர்ப்பாளர்களுக்கு இளவேனில் ஆலோசனை தருவர், கீழே அனைத்து அமெரிக்கத் தேர்வு குழுமியத்தின் (AAS) 2017 வெற்றிகரத் தேர்வுகள்.
தமிழரைப் பொறுத்தளவில் வெப்ப வலயத்தில் வாழ்ந்த நாம் வட அமெரிக்க குளிர் நாட்டு வெட்பதட்ப , பனியுருகல், மண் வெப்பம் போன்றவற்றை அறிந்து கொள்வதும், வேளா வேளைக்கு விதையில் இருந்தோ, இல்லை நாற்றிலிருந்தோ வளர்ப்பது பற்றி அறிந்து கொள்வது வெற்றிகரமான செடி வளர்ச்சிக்கு அவசியம்.
இலகுவான ஆரம்பத்திற்கு :
காய்கறி
அவரை வகை:
Pole Beans, Seychelles- இந்த அவரை 5 – 6 அங்குல நீளமானவை. கொடி நார்கள் அற்ற செடி கவனர வகை. பெரும் உற்பத்தியைத் தரும் சுவையான வகை. சாம்பார், துவையல்களில் பாவிக்கலாம்
Pea Patio Pride – இந்த அவரை வகை நாற்பது நாட்களிலேயே அறுவடை தரவல்லது. அழகான, ஒழுங்காக வதிவரியாக அமைந்து கொள்ளும் விதைப்பைகள், பிஞ்சு அவரைக்காய் அறுவடை மிருதுவானவையாகவும், இனிப்புடனும் காணப்படும்
மிளகாய்கள் :
இவ்வருடம் எமது இந்திய மற்றும் தாய்லாந்து மிளகாய் வகைகளை விட இன்னும் மூன்று வகையினங்கள் அறிமுகமாகின்றன.
pepper chilli pie – காரம் குறைவு
pepper mad hatter – மத்திம காரம்
pepper aji rico – இது மத்திமத்தில் இருந்து அதி உறைப்பு
வெண்டைக்காய்:
okra candle Fire
பூசனி :
Squash Winter Honeybaby
Squash Sugaretti
நீத்துப் பூசனி :
Watermelon Mini Love
Watermelon Gold in Gold
தக்காளி:
Tomato patio Choice yellow
Tomato midnight snack
Tomato chef’s choice yellow
வருடாந்த வளர்ப்புச் செடி :
மேலும் 2017 இன் எமது பிரதேசத்திற்குத் தகுந்த ரோசாச் செடி Scent from Heaven எனப்படும் வகையாகும்.
வட அமெரிக்கத் தமிழரின் வெற்றிகர மண் விளையாட்டிற்கு எமது வாழ்த்துக்கள்
– யோகி
Tags: அவரை, காய்கறி, தக்காளி, நீத்துப் பூசனி, பூசனி, பூச்செடி, மிளகாய்