\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

MN தமிழ் பள்ளியின் ஆண்டு விழா  2017

ஏப்ரல் 8ம் தேதி பள்ளியின் 9ம் ஆண்டு விழா ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு பள்ளி ஆண்டு விழா ஆரம்பித்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழாவை, பள்ளிக்குழுவினர்,  உட்பரி ஆசிரியர்கள், ஷாப்கின்ஸ் ஆசிரியர்கள் மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் விழாவைத்  தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் திரு. குமார் மல்லிகார்ஜுனன் பங்கேற்று வாழையிலை  விருந்து மற்றும் பள்ளி ஆண்டு விழாவைச் சிறப்பித்தார்.

பள்ளி ஆசிரியர்களுக்குக்  கேடயம், சான்றிதழ்களைப் பள்ளி முதல்வர் வழங்கினார். இந்த ஆண்டு நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,  ஓவியப் போட்டி, தமிழ்த்தேனீ போட்டிகளில் பங்குபெற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பு விருத்தினர் பேராசிரியர். குமார் மல்லிகார்ஜுனன் மற்றும் Dr. ஆறுமுகம் ராமலிங்கம் சான்றிதழ் மற்றும் கேடயங்கள்  வழங்கினார்கள்.

அனைத்து போட்டிகளிலும்  பங்கேற்று, அதிகப் புள்ளிகளைப் பெற்ற  மாணவ மாணவியருக்கு செந்தமிழ்ச் செல்வன், செந்தமிழ்ச் செல்வி சிறப்பு கோப்பைகள் வழங்கப்பட்டன.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் சில  உங்களுக்காக

MNTS School Annual Day 2017

  • ராஜேஷ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad