இறால் வறுவல்
கடல் உணவு ரசிகர்களுக்குப் பிடிக்கும் இறாலை, சுலபமாகச் சுவையாகச் சமைக்கும் வழிமுறை இது. இறாலில் உடலுக்கு நன்மையளிக்கும் புரதம், விட்டமின் B12, அமினோ அசிட், ஒமேகா-3, செலினியம் ஆகியவை இருக்கின்றன.
சிலருக்கு இறால் அல்லது பொதுவான கடலுணவு அலர்ஜி இருக்கும். அப்படி இல்லையென்றால், தயங்காமல் இதைச் சமைத்துப் பார்க்கவும்.
இங்கு இறால் என்று குறிப்பிட்டாலும், Prawn அல்லது Shrimp – இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- இறாலை நன்கு கழுவி, உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டுக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் ஒரு தட்டையான வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கருவேப்பிலை, மிளகாயைக் கீறி போட்டுத் தாளிக்கவும்.
- பின்பு ஊறவைத்த இறாலைப் போட்டுப் பிரட்டி விடவும்.
- இதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா போட்டு, மிதமான சூட்டில் வறுக்கவும்.
- இறாலுடன் மசாலா நன்றாகச் சேர்ந்து, வறுபட்டவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.
- கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
பிரமாதமான இறால் வறுவல் ரெடி. மாலை சிற்றுண்டியாகவோ, மீன் அல்லது இறால் குழம்பு சோற்றுடனோ,, பிரியாணி போன்றவற்றுடனோ சாப்பிட உகந்தது. தட்டில் வைத்தவுடன் காலி ஆகிவிடும். உத்தரவாதம்.
- சங்கீதா சரவணகுமரன்.
Tags: spicey fried shrimp, இறால் வறுவல்