ரிது – பருவக்காலங்களின் கோர்வை
மினியாபொலிஸ் நகரில் ஜனவரி மாதத்தில் “ரிது (RITU) – பருவங்கள்” எனும் நாட்டிய நிகழ்ச்சி நடந்தேறியது.
ரிது எனும் சம்ஸ்கிருத சொல், தெற்காசிய நாடுகளில்- குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ், நேபால், இலங்கை போன்ற நாடுகளில் நிலவும் ஆறு பருவகாலங்களைக் குறிப்பிடும் பதமாகும். இப்பருவக் காலங்களை வரிசைப்படுத்தி நான்காம் நூற்றாண்டில், காளிதாசரால் இயற்றப்பட்ட ரிது சம்ஹாரம் எனும் இலக்கியத்தின் அடிப்படையில் ‘கலா வந்தனம்’ எனும் பரதநாட்டியக் குழுவினர், நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்து அமைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சி , செயிண்ட் பால் நகரில், ஜனவரி மாதம் 28ஆம் தேதி, ஹாம்லின் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
வசந்தம், கோடை, இலையுதிர், பருவமழை, குளிர், உறைபனி ஆகிய பருவ நிலைகளை அனுபவம் வாய்ந்த எட்டு பரதநாட்டியக் கலைஞர்கள் சிறப்பாக அரங்கேற்றியிருந்தனர். பல தரப்பினரும் கலந்து கொண்ட இவ்விழா இந்திய நாட்டின் கலை/ கலாச்சாரங்களை மினசோட்டா வாழ் இந்தியருக்கும், அமெரிக்கர்களுக்கும் சிறப்பாக எடுத்துரைத்தது.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பருவத்தையும் தனித்தனியே விளக்கும் விதத்தில், பல நிகழ்ச்சிகளையும் இக்குழுவினர் அமைத்து வருகின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன்னர், ஜூன் மாதம் 10ஆம் தேதியன்று பருவமழையின் சிறப்புகளை வெளிக்கொணரும் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கோமோ பூங்காவில் நடைபெற்ற இதில் பல ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பனிப்பூக்கள் சார்பில், எங்களது பிரதம படப்பிடிப்பாளர் திரு. ராஜேஷ் கோவிந்தராஜன் எடுத்த புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்காக.
RITU – THE SEASONS AT COMO CONSERVATORY