\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மினியாப்பொலிஸ் மாநாட்டு அரங்கு Minneapolis Convention Center

மாநில விருந்தாளிகளையும், உள்ளூரவரையும் பல கண்காட்சிகளுக்கும், கலைக்கூடங்களுக்கும், மாநாடுகளுக்கும் வரவேற்கிறது மினியாப்பொலிஸ் மாநாட்டு மண்டபம். மினியாப்பொலிஸ் நகரமும் இதன் அரங்குகளும் மற்ற பெரும் நகரங்கள் போன்றல்லாது, வருவோர் இலகு பாவனை கருதித் திட்டமிட்டு அமைக்கப்பட்டது.

 

மினியாப்பொலிஸ் நகரத்தின் வர்த்தக மையம் நிக்கலெட் மால் (Nicollet Mall) ஆகும். இந்த மாலிற்கும் மினியாப்பொலிஸ் இசையரங்கிற்கும் (Orchestra Hall) அருகே அமைந்துள்ள அரங்கே மினியாப்பொலிஸ் மாநாட்டு மண்டபமாகும்.

 

 

முகவரி 1301 2nd Ave S, Minneapolis, MN 55403-2735

 

இவ்விடம் தெருக்களும், அடையாளக் குறியீடுகளும் பெருஞ்சாலையில் இருந்தும், உள்ளூர்த் தெருக்களிலிருந்தும், மற்ற இடங்களிலிருந்தும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன.

 

 

மேலும் மினசோட்டா மாநிலத்தின் கால நிலைக்கேற்ப அரங்கை அடையப் பல வழிகள் உள்ளன. வெளியில் நடக்க இயலும் தட்ப வெப்பங்களில்தெருவீதிகளைப் பயன்படுத்தலாம். மழை, பனி ஆகியவற்றில் நனையாமல் நகரின் பலபகுதிகளில் இருந்தும் வான்பாதைகள் (Skyways) மூலம் வரவும் வசதிகள் உண்டு.

 

 

 

விசாலமான 11 ஏக்கர் பரப்பளவில் அமைவுற்ற மினியாப்பொலிஸ் மாநாகரத்தின் வான்பாதைகள் (Skyways) அந்தரப்பாலங்கள் மற்றும் தெருக்களுடன் இலகுவாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் ஒரேசமயத்தில்  பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.

 

 

இந்த அரங்கு 3 மாடிகளைக் கொண்டு அமைந்தது. இவ்விடம் இரண்டு பெரும் மாநாட்டு மண்டபங்களையும், இரண்டு பெரிய மேடை நடன அரங்குகளையும் (ballrooms) உட்கொண்டு அமைந்துள்ளது. மேலும் பல விரிவரை அறைகளும் கொண்டமைந்துள்ளது.

 

 

எவ்வாறு இங்கு வந்து சேர்வது?.

 

இங்கு வெளியூர் விருந்தாளிகள் வருவதற்குப் பலவழிகள் உள்ளன. மினியாப்பொலிஸ் செயின்ட்பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாடகை வாகனங்கள் மட்டுமன்றி, பொதுப் போக்குவரத்தான ரயில், பஸ் ஆகியவற்றின் மூலமும் வந்தடையலாம்.

 

அரங்கின் அருகாமையில் பல தங்குமிடங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அரங்குடன் வான்வழி மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

 

மினியாப்பொலிஸ் நகரைச் சுற்றிப்பார்க்க இலவச பஸ் சேவையும் இவ்விடம் உண்டு

 

மினியாப்பொலிஸ் அரங்கு அருகாமை உணவகங்கள்
Downloadable Skyway Indian Restaurant Map

தொகுப்புஊரவன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad