23 வது கற்பாலக்கொண்டாட்டம் (Stone Arch Bridge Festival)
ஸ்டோன் ஆர்ச் ஃபெஸ்டிவல் என்பது மினியாப்பொலிஸ் நகரில் செயின்ட் ஆந்தனி நீர்வீழ்ச்சிக்கருகே மிசிசிப்பி ஆற்றைக் கடக்க உதவும் பண்டைய கற்பாலத்தில் கொண்டாடப்படும் கோடைக்கால விழாவாகும். இது வெள்ளிக் கிழமை ஜூன் 16இல் இருந்து ஞாயிற்றுக் கிழமை ஜூன் 18 வரை நடைபெற்றது. வானம் முகில் பிளந்து மழை பொழிவேன் என மிரட்டினும் மழையினால் கொண்டாட்டங்களிற்குப் பாதிப்பில்லை. இம்முறை மினசோட்டாக் கோடை வெய்யில் உக்கிரம் இல்லாமல் யாவும் இதமான கால நிலை விழாவாக அமைந்தது.
இது மிசிசிப்பி ஆற்றின் மறுபுறம் டிங்கி டவுன் (Dinkytown) எனப்படும் படைப்பாளிகள், பல்கலைக்கழக மாணவ வதிவிடங்கள், பழமை வாய்ந்த கோதுமைத் தானியம் சேகரிப்புக் கட்டங்கள் போன்றவற்றைக் கொண்ட சிறிய பகுதி பிரபலாமனது.
இந்தத் திருவிழா மினியாப்பொலிஸ் நகரின் கலை, கலாச்சாரங்களும், பல்வித பழைய புதிய நுட்பங்களும், புதுப்பது பியர் தயாரிப்புக்கள் மற்றும் சுவைக்கும் இடங்களும், உணவுச் சாவடிகளும் ஒருமிக்கும் வார இறுதி விழா எனலாம்.
பூங்காவில் மினசோட்டா ஆர்க்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சி:
மினசோட்டா இசைக் கலைஞர்கள் வெளியரங்கில் ஆர்வத்துடன் கையில் பியர், வைன், சிற்றுண்டி ஆகியவற்றை வைத்துக் கொண்டு, வந்திருந்த மக்கள் அனைவரையும் பண்டைய ,மற்றும் தற்கால இசைமீட்டல்களுடன் வரவேற்றனர்.
Stone Arch Festival
பண்டைய அமெரிக்க வாகனங்கள் கண்காட்சி:
பழைய கார் மாடல்களில் ஆர்வமுள்ளோருக்கு பல ரக வாகனங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இந்த வாகனங்களில் சில நூறாண்டு சென்றும் இன்றும் வீதியில் ஓடும் வகையில் காணப்பட்டன.
மேலே எவ்வாறு பழைய மண்ணெண்ணெய் எரிபொருள் வாகன இயந்திரம் தொழிற்பட்டது என்பதை ஆர்வமுள்ள பல நடுத்தரவயது, மற்றும் சிறுவர், சிறுமியருக்கு ஓய்வு பெற்ற தொழில் நுட்பவியலாளர் நடை முறை விளக்கம் தருகிறார்.
சிக்கனக் குடும்பம் நடத்த சிறுவீடு கண்காட்சி:
சூழலுக்கு மாசு தராது, முழுதாக சூரிய சக்தி மட்டுமே கொண்டு, நாட்டுப்புறங்களில் நகர இணைப்புகள் இன்றி வாழலாம் என்பதற்கான Off-Grid Tiny houses எனும் விளக்கம் மினசோட்டா மின்னிணைப்புத் தாபனத்தின் ஆதரவினால் உள்ளூர் பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் துறை மாணவர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
இருநூறு சதுர அடி பரப்பளவு மட்டுமே உள்ள, ஆனால் சகல வசதிகளையும் கொண்ட இந்தச் சிறு வீட்டைப் பார்வையிட அனைவரும் வரிசையில் நிற்பது கண்கொள்ளாக் காட்சி.
மகரந்த வண்டுகளுக்கு மினசோட்டாவில் ஒரு பகுதி உதவுதல் குறித்த புள்ளி விபரம்
சில உலோகச் சிறப்புச் செதுக்கல்கள்:
கலைர்களின் சம உரிமைக்குக் குரல் கொடுக்கும் போராட்டம்:
ஒட்டு மொத்தத்தில் கோடையில் நடைபெறும் பற்பல கொண்டாட்டங்களில் பலநூறு படைப்பாளிகளும், கலைஞர்களும் கூடும் விழா இது. மினியாப்பொலிஸ் நகரில் கோடைகாலத்தில், குதூகலமாகப் பார்வையிடுவது மட்டுமின்றி, சில மைல்கள் உடற்பயிற்சிக்காக நடந்தோஅல்லது சைக்கிள் செலுத்தியோ சற்று வியர்வை சிந்த இயலும். மேலும், பசியாற பல்சுவைச் சிற்றுண்டிகள் பெற்று, விரும்புவர் புதுப்பது ரக பானங்கள் அருந்தி, கலைப் படைப்புக்கள் வாங்கி கண்டு களிக்கவும் இது நல்லதொரு இடமாகும்..
இங்கு உங்கள் செல்லப்பிராணிகள் தொடங்கி, அனைவருக்கும் வந்து போக வசதியுண்டு.
தொகுப்பு – ஊரவன்