மினசோட்டா மாநிலம் பற்றிய குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்
- மினசோட்டா மாநிலத்தின் அடையாள விளையாட்டு
(Official game of Minnesota) (5) - கடந்த வருடம் இறந்த மினசோட்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் ( 4)
- மினசோட்டாவின் மிகப் பழமையான முதல் நகரம். (3)
- மினசோட்டா மாநிலத்தின் செல்லப் பெயர்களில் இதுவும் ஒன்று. இப்பெயரில்
மினசோட்டா பல்கலையின் ஃபுட்பால் குழு பன்மையில் உள்ளது (3)
- மினசோட்டா மாநிலத்துக்குக் கிழக்கே அமைந்துள்ள இம்மாநிலத்தை சுப்பீரியர் ஏரி பிரிக்கிறது. (4)
- மினசோட்டா மாநிலத்தின் பெரிய நதிகளில் ஒன்று (5)
- மினசோட்டா மாநிலத்தில் தலைமையிடத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய சில்லரை வணிக நிறுவனப் பெயர் (4)
- இந்தியாவில் ஹைதராபாத், செகந்திராபாத் போல செயிண்ட் பால், மினியாபொலிஸ் நகரங்களை இப்படிக் கூறுவார்கள். (10)
மேலிருந்து கீழ்
- மினசோட்டாவுக்குத் தெற்கேவுள்ள அண்டை மாநிலம் (3)
- மினசோட்டா மாநிலத்துக்குக் கிழக்கே உள்ள அண்டை மாநிலம் (7)
- மினசோட்டா மாநில அடையாளப் பறவை (3)
- சிறுவர் கதைகளில் புனையப்பட்ட ராட்சத மரவெட்டி. பெமிட்ஜி அருகே
இவருக்கு ஒரு சிலை உள்ளது(6)
- மினசோட்டாவின் மிகப் பெரிய நகரம் (6)
- மினசோட்டா மாநிலத்தின் துறைமுக நகரம் (3)
- மினசோட்டா மாநிலத்தில் விளையும் தானிய வகை (3)
வலமிருந்து இடம்
- மினசோட்டாவில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற மருத்துவமனை. (2)
- மினசோட்டாவிலிருக்கும் பேஸ்பால் குழுவின் பெயர் (4)
- மினசோட்டா மாநிலத்திலும் கிடைக்கும் மீனின் தமிழ்ப்பெயர். (4)
கீழிருந்து மேல்
- மினசோட்டா மாநிலத்தின் அடையாள நிறம் (2)
- மினசோட்டா மாநிலத்தில் உள்ள பெரிய நீர்வீழ்ச்சி. (4)
- மினசோட்டா ஆளுநரின் முதல் பெயர் மட்டும் (3)
- மினசோட்டா மாநிலம் ஒரு காலத்தில், இயற்கையாகக் காணப்பெறும் வேதிப்பொருளை அதிகம் எடுக்கும் மாநிலமாகத் திகழ்ந்தது (6)
(பதில்)