சொற்புதிர் – காய்கறிகளைக் கண்டுபிடியுங்கள் – விடை
ஜூன் மாதம் தேசியப் பழங்கள் மற்றும் காய்கறிகள் மாதமாகக் கொண்டாடப்பட்டது. பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காய்கறிகளும் பழங்களும் கடைகளில் நிரம்பி வழியும். இக்காலங்களில் புத்தம் புதிய பழங்களும், காய்கறிகளும் தோட்டத்திலிருந்து நேரடியாக உழவர் சந்தைகளில் கிடைக்கும்.
பல சமயங்களில் நாம் காய்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை அப்படியே குறிப்பிடுவதுண்டு. அவசரத்தில், அதற்கான தமிழ்ப் பெயர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இங்கே பட்டியலிலுள்ள காய்கறிகளின் தமிழ்ப் பெயர்கள் அருகிலுள்ள கட்டத்தில் மறைந்துள்ளன. அதனைக் கண்டுபிடிப்போமா?
BROCOLLI – பச்சைப்பூங்கோசு
DRUMSTICK – முருங்கைக்காய்
GOOSEBERRY – நெல்லிக்காய்
CABBAGE – முட்டைக்கோசு
ONION – வெங்காயம்
CARROT – குருக்கிழங்கு
PLAINTAIN FLOWER – வாழைப்பூ
PLAINTAIN – வாழைக்காய்
BOTTLE GUARD – சுரைக்காய்
IVY GUARD – கோவைக்காய்
LETTUCE – இலைக்கோசு
CAULIFLOWER – பூங்கோசு
BEANS – விதையவரை
INDIAN PENNYWORT – வல்லாரை
AMARANTHUS – அரைக்கீரை
VELDT GRAPE (devil’s backbone) – பிரண்டை