\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பார்க்கர் ஏரி நீர் சறுக்கு (Water Ski Show)

மினசோட்டா எங்கும் ஏரிகளாக இருப்பதால், விதவிதமான நீர் சார்ந்த விளையாட்டுகளை இங்குள்ளோர் விளையாடுவதுண்டு. அதில் வாட்டர் ஸ்கீ (Water Ski) எனப்படும் நீர்ச் சறுக்கு விளையாட்டும் ஒன்று. பனியில் சறுக்கிச் செல்வது போல், தண்ணீரின் மேல் சறுக்கிச் செல்லும் விளையாட்டு இது. வேகமாகச் செல்லும் படகில் கட்டப்பட்டிருக்கும் கயிறை ஒரு குழுவாகப் பிடித்துக்கொண்டு, ஒருவர் பின் ஒருவராக, ஒருவர் மேல் ஒருவராகப் பல நிலைகளில், பார்வையாளர்களைக் கவருமாறு சாகசம் புரியும் விளையாட்டு இது.

மினசோட்டாவில் நீர்ச் சறுக்கு விளையாட்டில் பிரபலமான குழுவாக இருப்பது, Shockwaves நீர்ச் சறுக்குக் குழுவாகும். கோடைக்காலத்தில் இங்கிருக்கும் ஏரிகளில் இவர்கள் தங்களது திறமையைக் காட்டி, மக்களை மகிழ்விக்கும் வண்ணம் சாகசக் காட்சிகள் நடத்துவதுண்டு. அது போன்ற ஒரு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று ப்ளைமவுத்தில் இருக்கும் பார்க்கர் ஏரியில் (Plymouth Parkers Lake) நடந்தது.

இக்குழுவைப் பற்றி மேலும் தகவல்களை, கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். ஆர்வமிருப்போர் இக்குழுவில் இணைந்து பயிற்சி பெறலாம்.

https://www.splwsa.org/home

ப்ளைமவுத்வாசிகள் குடும்பத்துடன் போர்வை, நாற்காலி சகிதம் பார்க்கர் ஏரிக்கு வந்திருந்தனர். ஏரிக்கரை முழுவதும் மக்களால் சூழப்பட்டிருந்து. தண்ணீரில் நடந்த சாகசங்களைக் கண்டு, உற்சாகத்துடன் மக்கள் கைதட்டி, தங்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தினர். ஐஸ்கிரீம், பர்கர் விற்பனை உணவுப்பிரியர்களுக்கு வசதியாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.

 

MN Water Ski Show – 2017

 

  • சரவணகுமரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad