கவித்துளி
கவித்துளி 1
இரவின் மடியில் இளைப்பாறுகையிலே
இன்னிசை மழை இனிதெனப் பொழிந்திடவே
இளந்தென்றல் இதயத்தை இதமாய் வருடிடவே
இசையில் இணைந்திட பாவிமனம் தவித்திடவே
இன்பத்தின் உச்சந்தனை அள்ளி நுகர்ந்திடவே
இன்னிசையோடு இயைந்தே இன்பத்தை எய்திடவே
இதயத்தில் நாணத்தோடு காதல்தீபம் ஏற்றிடவே
இன்முகத்தோடு இதய சிம்மாசனத்தில் ஏறிடவே
இதழில் பழரசம் பருகிடக் காத்திருக்கவே
இடுப்பு மடிப்பினில் இதயம் பறிபோயிடவே
இரவின் நீளத்தில் கோலமகளும் நாணிடவே
இரவின் ஒளியினில் இதழ் பதித்திடவே
இன்னுயிரும் மெய்யதுவும் ஒன்றாகி இணைந்துவே !!!
கவித்துளி 2
ஒளி வருடி உளம் நனைக்க
வான் மழையோ உடல் நனைக்க
உள்ளக் களிப்பினிலே உயிர் நனைய
பவளக் கொடியாளோ அருகிருக்க
காதல் போதையிலே மயங்கியிருக்க
தென்றல் அசைந்து மெய்யுருக
அர்த்த சாம இரவினிலே
பால்நிலவு வெளிச்சத்திலே
கலை கொஞ்சும் சிற்பங்களும்
காட்சிப் பொலிவு இழந்தனவோ?
சிற்பம் ஒன்று நடனமாட காடும் தன்குணத்தை மறந்திட
அலைகடலின் ஓசையிலே
அழகியதோர் வெளியினிலே
வான்மகளும் விளக்கொளியில்
தன்னழகை ரசித்தனளோ? வழியோரம் விழிவைத்தே
கடந்த காலத்தைப் புறந்தள்ளி
கண்ணயரக் கண்டேனோ?
உமையாள்