\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காற்றினில் உலவும் கீதங்கள் – Top 5

கடந்த சில வாரங்களில் நிறைய படங்களின் பாடல்கள் வெளியாகிவுள்ளன. ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர், ப்ரிமீயர் ஷோ, ரிலீஸ் என பட வெளியீட்டு ப்ராசஸ் மாறிப் போனதைப்போல், முன்பு, ஒருநாளில் நிகழும் பாடல் வெளியீட்டு ப்ரோட்டோக்கால், இன்று சிங்கிள் ரிலீஸ், டபுள் ரிலீஸ், பிஜிஎம் ரிலீஸ் என்று மாதக்கணக்கில், வருடக்கணக்கில் நிகழுகின்றது. அப்படி சமீபத்தில் வெளிவந்த பாடல்கள் பல குறிப்பிடத்தக்க வகையில் இருந்தாலும், நாம் இங்கு தொடர்ந்து பார்ப்பது வெளிவந்த படங்களை மட்டும் தான்.

முந்தைய பட்டியல்கள் இங்கே:

ஃபிப்ரவரி 2017

ஏப்ரல் 2017

ஜூலை 2017

விவேகம் – காதலாட

வேதாளத்திற்குப் பிறகு அனிருத் – சிவா – அஜித் கூட்டணி மீண்டும் இதில் இணைந்திருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படம் போல் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். அதில் தமிழ் மசாலா சேர்க்க விருப்பப்பட்டு, அது சாம்பார் பீட்சாவாகிவிட்டது. அனிருத் வெகு விரைவிலேயே ஒரு டெம்ப்ளேட்டுக்குள் செட் ஆகிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால், இம்மாதிரி படங்களுக்கு அனிருத்தின் ப்ளாஸ்டிக் இசைதான் பொருத்தம். சர்வைவா, தலை விடுதலை, காதலாட என்று ஹிட் சாங்ஸ்க்குக் குறை வைக்கவில்லை. அவருடைய செப்டம்பர் மாத அமெரிக்க இசைப் பயணம் ரத்தானதில் இளம் ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

உன்னோடு வாழ்வது ஆனந்தமே

ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே

தீராத தேவைகள் ஆனந்தமே

இல்லைகள் இங்கில்லை பேரின்பமே

பொதுவாக என் மனசு தங்கம் – சிங்கக்குட்டி நீ தானே

கமர்ஷியல் படங்களுக்கு ஹிட்டடிக்கும் பாடல்கள் எவ்வளவு முக்கியம் என்பதும், தற்போதைய ட்ரெண்டில் இன்ஸ்டண்ட் ஹிட் கொடுப்பது யார் என்பதும் உதயநிதி ஸ்டாலினுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. முன்பு, ஹாரிஸ் ஜெயராஜ் என்று இருந்தவர், இப்ப இமான் என்று ட்ராக் மாறிவிட்டார். இமானும் நாம் ஏற்கனவே கேட்ட பாடல்களின் சாயல்களில், இசையைக் குலுக்கிப் போட்டு ஹிட்டடித்து விடுகிறார். இப்பாடலைப் பாடிய ராஜகணபதியும், நிரஞ்சனாவும் இந்தாண்டு மின்னியாபொலிஸ் ஃபெட்னா இசை நிகழ்ச்சியில் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கக்குட்டி நீதானே ஒன்ன   

செல்லங்கொஞ்ச வாறேனே

சொல்லச் சொல்லக் கேட்காம வந்து

குப்ப கொட்டப் போறேனே

தரமணி – யாரோ உச்சிக்கிளை மேலே

நா.முத்துக்குமார் – யுவன் – ராம் கூட்டணியின் கடைசிப் படம், பெரும்பாலோரின் பாராட்டுக்குரியதாக அமைந்தது. ஒரு காலத்தில் யுவன் பாட்டு சூப்பரா இருக்கும் என்று சொல்லும் நிலை தற்போது. யுவனின் ஹிட் சதவிகிதம் குறைந்து கொண்டே செல்லும் நேரத்தில், இப்படம் வெளிவந்து ஹிட்டாகியுள்ளது. ஒரு மெல்லிய சோகத்தை, துள்ளல் இசையுடன் கொடுக்க யுவனால் தான் முடியும். இப்பாடலை கேளுங்கள், புரியும்.

யாரோ உச்சிக்கிளை மேலே குடைப் பிடித்தாரோ அது யாரோ

பெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ

யாரும் இன்றி யாரும் இங்கு இல்லை

இந்த பூமி மேலே தன்னந்தனி உயிர்கள் எங்கும் இல்லை

மீசைய முறுக்கு – மாட்டிக்கிச்சே

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் இசைக்கோர்ப்பு ஒரு ரகம். ஒரு வகையான பாடல் வரிகள், ஒரு டைப்பான உச்சரிப்பு என ரெகுலர் தமிழ் இசை ரசிகர்களுக்கு ஜீரணமாகும் இசையில்லை தான். ஆனாலும், இதுவரை நல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறார். பாடகர், இசையமைப்பாளர், ஹீரோ, சமூகப் போராளி என ஒரு குட்டி டி.ராஜேந்தராக வலம் வருகிறார். இந்தப் படமும் முதலுக்கு மோசமில்லாமல் ஓடிவிட்டதால், இவருடைய தசாவதானி அவதாரத்தைத் தொடர்ந்து நாம் காணும் நிலை.

நான் தான் உன் தோனி

என்னோடு வா நீ

தங்கம் போல் பளபளக்குது உன்னோட மேனி

நான் தான் உன் ரெய்னா

நீ தானே குயினா

வானத்தில் பறக்குதப்பா கலர்கலரா மைனா

வனமகன் – யம்மம்மா அழகம்மா

தொடர்ந்து பல்வேறு இசையமைப்பாளர் இசையில் பாடி வந்தாலும், ஹாரிஸ் இசையில் பாடும் போது மட்டும் தான், பாம்பே ஜெயஸ்ரீயின் குரலும், பாடலும் வெளியே தெரிகிறது. இப்படத்தில் இயக்குனர் விஜய் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை விட்டு, ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜுக்கு இது ஐம்பதாவது படம், திரையுலகில் 16வது வருடங்கள். வாழ்த்துகள். அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. தியேட்டர் ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஹாரிஸுக்காகவோ, விஜய்க்காகவோ, ரவிக்காகவோ பார்க்க வேண்டுமோ, இல்லையோ, சாய்சா சாகலுகாகப் பார்க்க வேண்டிய படம்!!

ஒரு சில நொடி குழந்தையைப் போலே

மறு சில நொடி கடவுளைப்போலே

பல நொடிகளில் அதனினும் மேலாய்

நீயானாய்!!

எம்மா ஏ அழகம்மா

இருதயம் இருதயம் மெழுகம்மா

எம்மா நீ அழகம்மா

விரல்பட விரல்பட இளகம்மா

மெர்சல், கருப்பன், ஸ்பைடர், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களின் பாடல்கள் வெளியாகிவுள்ளன. அதில் எவையெவை நமது பட்டியலில் இடம்பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.

  • சரவணகுமரன்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad