ஈரல் பிரட்டல் கறி
இலையுதிர் காலம் வட அமெரிக்காவிற்கு வந்துவிட்டது, குளிர் பருவம் ஆரம்பிக்க இனி கொழுப்பு, புரத உணவுகளைஇயல்பாக மனம் நாடும். இந்தத் தருணத்தில் அருமையான புரதம், மற்றும் அரிய கொழுப்பு, மற்றும் உயிர் சத்துக்கள்தரும் ஈரல் பிரட்டல் அருமையானது,
ஈரல் கறி சாப்பிடுவது சம்பிரதாயமாக அறிமுகமாக வேண்டியது. இதன் உருகி, வாசம் போன்றவை புதிதாகச்சுவைப்பவர்கள் சாதாரணக் கறி உணவுகள் போன்றதல்ல. எனவே சுடச் சட சோற்றுடன் சேர்த்துச் சுவைப்பது சிறந்தது.
தேவையானவை
- ½ இறாத்தல் ஈரல்
- 5 சின்ன வெங்காயம் அரிந்து எடுத்துக் கொள்க
- 5 ஏலக்காய்
- ½ கரண்டி குற்றி எடுத்த மிளகு
- ½ கரண்டி சீரகம்
- 1 கரண்டி மஞ்சள் தூள்
- 1 கரண்டி கறித் தூள்/ இலங்கை வறுத்த கறிமிளகாய்த்தூள்
- 1 கரண்டி அரிசி அல்லது கோதுமை மா
- 1 கோப்பை தேங்காய்ப் பால்
- தேவையான அளவு சமையல் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
இறைச்சிச் சமையல்களில் பதமாகச் சமைப்பதற்கு நாம் புரத வகைகள் எவ்வாறு பதமாக வேக வைத்து, இறக்கவேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக ஈரலை, கவனயீனமாக அதிக வெப்பத்தில் சமைத்தால் ஈரல் சுவையை இழந்துவிடும்.
முதலில் ஈரலைச் சிறிய, சமமான ½ அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் அடுத்து மஞ்சள்தூள் சேர்த்து, உப்பு, கரித் தூள் தட்டி பிரட்டி எடுத்துக் கொள்ளவும். இதன் மேல் இலேசாக மா தூவி, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துத் தட்டி ஒரு பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு மெதுவாக ஈரல் துண்டுகளைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும், இந்தப் பொரித்தலில் பொதுவாக ஈரல் துண்டுகளின் பக்கங்கள் யாவும் இலேசாகப் பொன்னிறமானவுடன் எடுத்து விடலாம் .
அடுத்து குற்றி எடுத்த ஏலக்காய், சீரகம், நறுக்கியச் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு சற்று வறுத்து எடுத்துத் தேங்காய்ப் பால் விட்டுக் கிளறி எடுக்கவும்.
கமகமக்கும் வாசனை வேண்டுமானால் ஓரிரு விரல் நுள்ளு வறுத்த மிளகாய்த்தூளைத் தூவிக் கலந்து, அடுப்பில் இருந்து இறக்கி, சுடச் சுட சோற்றுடன் பரிமாறிக் கொள்ளலாம்.
தொகுப்பு -யோகி
Tags: ஈரல் பிரட்டல் கறி