\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum)

Filed in சமையல் by on September 24, 2017 0 Comments

 

சில மெக்சிகன் ரெஸ்டாரண்ட்களில் ஸ்டஃப்டு குடைமிளகாய் உணவு பதார்த்தங்களைப் பார்த்திருக்கலாம், சுவைத்திருக்கலாம். அதை நம்மூர் சுவையில் எப்படிச் செய்யலாம் என்று இங்கே காணலாம்.

 

தேவையான பொருட்கள்

 

  1. குடைமிளகாய் – 2
  2. காலிஃப்ளவர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு
  3. பனீர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு
  4. சீஸ் – அரைக் கப்
  5. வெங்காயம் – பாதி
  6. பச்சை மிளகாய் – 1
  7. இஞ்சிப் பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  9. மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
  10. கரம் மசாலா – அரை டீஸ்பூன்
  11. சீரகத் தூள் – கால் டீஸ்பூன்
  12. உப்பு – தேவைக்கேற்ப
  13. எண்ணெய் – 4 டீஸ்பூன்
  14. கருவேப்பிலை

 

செய்முறை

 

  • வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கருவேப்பிலை, கீறியப் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதங்கியவுடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்க்கவும்.
  • பிறகு, இதனுடன் துருவிய காலிஃப்ளவர் போட்டு, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • இதன் பின்னர், துருவிய பன்னீர் போட்டு, மிதமானச் சூட்டில் ஒரு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  • பிறகு, இந்த மசாலாவைக் கிளறி, அடுப்பை அணைத்து, ஆற விடவும். உள்மசாலா (ஸ்டஃபிங்) ரெடி.
  • குடை மிளகாயை இரண்டாக நறுக்கவும். உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிடவும்.
  • நறுக்கிய குடை மிளகாயினுள், ஒரு அடுக்கு நாம் ரெடி செய்த மசாலாவை வைத்து, மேலே சீஸ் தூவி, மீண்டும் ஒரு அடுக்கு மசாலா வைத்து, அதற்கு மேலே சீஸ் தூவவும்.
  • இதை, பேக்கிங் ட்ரெயில் வைத்து, 350 F சூட்டில் ஓவனில் 20-25 நிமிடங்கள் வைக்கவும். (குடை மிளகாய் வெந்திருக்க வேண்டும்).

 

ஸ்டஃப்டு குடைமிளகாய் ரெடி!! இது ஒரு மெக்சிக இந்திய கூட்டுத் தயாரிப்பு. 🙂

 

  • சங்கீதா சரவணகுமரன்.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad