\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கர்ம வீரர்

வீணர்களால் ஜலியன் வாலாபாக்கில்

    விளைந்ததந்தக் கொடுமை கேட்டு

வீறுகொண்டு எழுந்திட்ட வியத்தகு

   வீர்ர்கள் பல்லாயிரம் நாட்டினிலே!

விருதுப்பட்டிச் சிற்றூரில் வித்தாயுதித்து

   விரைவாய்ப் போராட்டக் களம்புகுந்து

விருட்சமாய் வளர்ந்து வெள்ளையனை

    விரட்டியடித்த அஹிம்சாவாதி கருப்புகாந்தி!!


சுதந்திர இந்தியாவைக் கட்டிக்காக்க

    சுயநலமின்றி உழைத்திட்ட தலைவர்பலர்!

சுகமாக மக்கள் வாழத்தம்மைச்

    சுருக்கிய ஒருசிலருள் முதன்மையானார்!


அரசியல் என்றாலே பொய்யும்புரட்டும்

    அடாவடியும் என்றாகிய இந்நாளில்

அனைவரின் நலமொன்றே நாடிவாழ்ந்த

    அற்புதத் தலைவர் அவராவார் !!


அருவிநீர் அலைகடல் சேராதுகாக்க

    அணைகள் கட்டுகவென ஆணையிட்டவர்

அந்நிய முதலீடு தொழில்நுட்பம்

    அனைத்தும் பெற்றிட்ட படிக்காதமேதை!!!


கால் வயிற்றுக் கஞ்சிக்குக்

    கதியில்லாக் காரணத்தால்

கல்வி கற்கப் பள்ளிசெல்ல

    குழந்தைகட்கு வழியில்லை !!


கண்டிட்ட நல்ல உள்ளம்

    கணக்கொன்று போட்டதங்கே!

கருத்தாகப் பள்ளிகளில் உணவளித்து

    கடும்பசிநீக்கியே கல்விக்கண் திறந்ததங்கே!!


தியாகத்தின் சுடரொளியது மறைந்திட்ட

        தினமிதனில் அவர்நினைவைக் கருத்தில்கொண்டு

திருந்திவாழும் முறைமை கற்போம் – அவரே

        திரும்பி வந்து நாடாள்தல் நிகழ்ந்திடுமே!!!

 

வெ. மதுசூதனன்.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad