மானிடம் கண்ட (ஏ)மாற்றம்
கண்ணில்பட்டதைத் தின்று
அறத்துடன் வாழ்ந்தவன் இன்று
நாகரிகம் எனும் போர்வையில்
மனிதத்தை மறந்துவிட்டானே!
ஆக்கத்திற்குக் கருவிகளைத்
தோற்றுவித்தது போதாதென்று
அழிவிற்கும் உருவாக்கி
அண்டத்தை அலறவிடுகிறானே!
சொந்த பந்தங்களுடன் அன்று
அனுசரித்து வாழ்ந்தவன் இன்று
சுற்றி நிற்கும் உறவுகளைக்
கத்தரித்து நிற்கிறானே!
அடுக்குமாடி வாழ்க்கையின் விளைவால்
அண்டை அயலாருடன்
சகவாசம் கொள்வதை
அருவெறுத்து ஒதுக்குகிறானே!
முப்பொழுதும் கைத்தொலைபேசியில்
மூச்சுவிடாது உரையாடுபவன்
அருகிலிருப்பவர்களுடன் சிறிதும்
அளவளாவ விரும்புவதில்லையே!
காலத்தின் கோலத்தால்
நாகரிகத்தில் முன்னோக்கிச் செல்பவன்
மனிதம் காப்பதை
மறந்தது விந்தைதானோ!
- மணிமாலா மதியழகன்
கவிதை மிக அருமை