\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

உடல், பொருள், நாடி,  நரம்பு, ஆன்மா அனைத்தும் சங்கீதம் பற்றிய நினைப்போடு துடிக்க வேண்டும் என்றால் நீங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். “Sapthswarangal a evening of musical enchantment ” என்ற தலைப்புக்கு ஏற்ற வாறு ஒரு “ இசையால் மந்திரித்த” மாலைப் பொழுது.

கச்சேரியின் முதல் வர்ணமாக “Cool” ராகமாக ஆரம்பித்த பெஹாக் “வனஜாக்ஷி ” காதுகளில் தேன் போல் வந்தது. கம்பீரமாக வந்த “அடாணா” வில் “ஸ்ரீ மஹாகணபதி” களை கட்டியது. வீணையின் நாடி நரம்புகள் மீட்டிய “மாயா மாளவ கௌளை” யில், உடலின் நரம்புகளை தட்டி எழுப்பினார் வீணா விதூஷி  திருமதி நிர்மலா. “தேவ தேவ கலையாமிதே ” என்று தொடங்கின கீர்த்தனையில் வீணையும், வயலினும் சராணாம்புஜா சேவனம் செய்தது.

துள்ளலோடு வந்த திரு . சிட்டி பாபுவின் பாணியில் பஹுதாரி ரசிகர்களை இந்த இரவு நேரத்திலும் உற்சாகப்படுத்தியது. கச்சேரியின் முக்கியப்பகுதியாக கீரவாணி ராகம் சந்தேகமில்லாமல் மனதை கொள்ளை கொண்டு போனது. கீர்த்தனையின் பாவத்தில் “இன்னமும் சந்தேகப் படலாமோ “ என்ற சங்கதியில் திருமதி நிர்மலா மற்றும் திரு வி.வி.ஸ். முராரியின் ஆலாபனையோடும்   தஞ்சாவூர் முருகபூபதி மிருதங்கமும், திரு ரவி பால சுப்ரமணியன் அவர்களின் கடமும் தனி ஆவர்தனத்தோடு அந்த “பொன்னம்பல சிவன் தாண்டவம் ஆடிய” பாவம் கண் முன் தெரியும் படி நிறுத்தினர். தியாகராஜரின் “ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா”, புரந்தர தாஸரின் “கோவிந்தா நின்ன நாமமே ” கடைசியாக மீரா பாயின்  “சாகர ராகோ” வோடு மங்களம் பாடிய பொழுது  இன்னும் கொஞ்சம் நேரம் பாடி இருக்கலாமோ என்ற ஏக்கத்தோடு நிறைவு பெற்றது கச்சேரி.

உண்மையில் ஒரு “Enchanted ” மாலைப் பொழுதாக, மனதில் நிறைந்த கச்சேரியை ஒருங்கிணைத்த அனைவ ருக்கும் நன்றி. சங்கீத விதவான்களுக்கு பணிவான வணக்கங்களும் நன்றிகளும்.

-லக்ஷ்மி

Tags: , ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Vidya says:

    Wonderful writeup, Lakshmi!
    Yes it was indeed a very beautiful concert last week!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad