வீடற்ற மனிதர்கள் யாம்
வீணாகிப் போனோமே
வீடேறும் காலம் வரை
வீதியிலே வாழ்வோமே
விதியாலே நொருங்கி நின்றோம்
வித்தையெல்லாம் மறந்து நொந்தோம்
வீராப்பு, விறல் எல்லாம்
விரைவாக களைந்து நின்றோம்
விலங்கு போலே நடத்திடுவார்
விரைந்து எம்மை கடந்திடுவார்
விரல் பட யோசிப்பார்
விலக்கி வைக்க முயன்றிடுவார்
வீடற்ற மனிதர்கள் யாம்
வீணாகி போனோமே
வீடேறும் காலம் வரை
வீதியிலே வாழ்வோமே
வினா ஒன்று கேட்கின்றேன்
விளக்கிடுவீர் விடை தெரிந்தால்
விளவு உம்மை விட்ட நேரம்
விளம்புதல் செய்வீரோ
வீடற்ற மனிதர்கள் யாம்
வீணாகி போனோமே
வீடேறும் காலம் வரை
வீதியிலே வாழ்வோமே
-லக்ஷ்மி
Tags: Charity, Help, Homeless, வீடற்ற மனிதர்கள்
Wow.. very touching
Very touching!!
மிக ஆழமான வரிகள் வாழ்த்துக்கள்
Super .. very true statements … makes
One thing – in particular the statement like
விலங்கு போலே நடத்திடுவார்
விரைந்து எம்மை கடந்திடுவார்