\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அரவணைப்பு

Filed in கவிதை, வார வெளியீடு by on November 19, 2017 1 Comment

அரவணைத்து  உறவு சொல்லும் அன்பான பரிமாற்றம்
அரண் அமைத்துத் தடுக்காத அன் பாற்றுப் பிரவாகம் !!

கன்றொன்று பசுவதனைக் களித்தணைத்தல் வாத்சல்யம் !
கதிரொன்று தலை கவிழ்ந்து நிலமணைத்தல் பெரும்போகம் !

உயிரோடு உடல் தந்த அவர் அணைத்தல் அது நேசம் !
உடன்  பிறந்து உடன் வளர்ந்த அவர் அணைத்தல் பாசம் !

நிலவோடு நிதம் பேசி அணைத்தல் ஒரு  பருவம்
நிழலான நட்பதனையே  நிதம் அணைக்கும் இளம் பருவம்

இதழோடு இதழ் சேரும் அவர் அணைத்தல் அது இன்பம்
இறையோடு இசைந்தியைந்து அணைத்தல் பேரின்பம்

-லட்சுமி சுப்பு

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Priya says:

    Wow !!! Simply Superb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad