அரவணைப்பு
அரவணைத்து உறவு சொல்லும் அன்பான பரிமாற்றம்
அரண் அமைத்துத் தடுக்காத அன் பாற்றுப் பிரவாகம் !!
கன்றொன்று பசுவதனைக் களித்தணைத்தல் வாத்சல்யம் !
கதிரொன்று தலை கவிழ்ந்து நிலமணைத்தல் பெரும்போகம் !
உயிரோடு உடல் தந்த அவர் அணைத்தல் அது நேசம் !
உடன் பிறந்து உடன் வளர்ந்த அவர் அணைத்தல் பாசம் !
நிலவோடு நிதம் பேசி அணைத்தல் ஒரு பருவம்
நிழலான நட்பதனையே நிதம் அணைக்கும் இளம் பருவம்
இதழோடு இதழ் சேரும் அவர் அணைத்தல் அது இன்பம்
இறையோடு இசைந்தியைந்து அணைத்தல் பேரின்பம்
-லட்சுமி சுப்பு
Wow !!! Simply Superb