அடிப் பெண்ணே…!!

இலைகளின் உரசலில் மரம்
உறைபனியிலும் மலரின் மணம்
அடை மழையிலும் உறை பனியிலும்
என்னவளின் ஆலய தரிசனம் ….!!
எனக்கோ அவளின் நித்திய தரிசனமே….!!
இரவின் மடியில் நிலவோ சற்றே இளைப்பாற
பறவைகளின் கிரிச் ஒலியின் இசையில்
தென்றலும் சங்கீதம் இசைக்க
ரம்மியமான இரவில் என்னவளின் சலங்கை ஒலிக்க …
மழையின் சாரலில் மெய்சிலிர்த்துப் போனேனடி …!
அருகினில் நீ …
குளிர்காய்கிறேனே நான் …!!
உதட்டோரப் புன்னகையில் கரைகிறேனே….!
மின்னல் இடையசைவில் இடிந்தே போகிறேனே….!
ஒற்றைப் பார்வையில் உறைந்தே போகிறேனே ….!!
நான் உயிர்ப்பிக்க மற்றொருமுறை பார்ப்பாயோ…!?
அடிப் பெண்ணே …!
– உமையாள்