\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கறுப்பு வெள்ளி ( Black Friday ) பதினேழு பாங்கான பரிகாரம்

“கறுப்பு வெள்ளி” எனப்படும் வர்த்தக விழுபடிச் சலுகை நாள் அமெரிக்க இணைதள வியாபாரிகளை இவ்வருடம் இன்புற வைத்துள்ளதாம். நுகர்வோர் பலரும் தமது கைத்தொலைபேசிகள் மூலமே பல்வேறு பண்டங்களையும் பெரும் விழுபடி (deep discount) உடன் வாங்கிப் புதிய சாதனையை உண்டாக்கியுள்ளனராம். இது வருடம் முழுவதும் ஆயுத்தமாகி ஆவலோடு எதிர்பார்த்திருந்த வர்த்தரர்களுக்கு இறுதியாண்டில் வரவுள்ள பரிகாரம் என்கிறது “ரயிட்டேர்ஸ்” செய்திதாபனம்.

இதுவரை சேகரிக்கப்பட்ட தரவு தகவல்களின் படி “சாமரின்” சில்லறை வியாபாரிகள் இணைதள விற்பனைகளில் $7.9 பில்லியன் வருமானத்தை “கறுப்பு வெள்ளி” மற்றும் “நன்றி நவிலல் நாள்” அன்று ஈடியுள்ளார்களாம். இது 2016 இல் இருந்து 17.9 சதவீத விற்பனை உயர்வு ஆகும். இந்தத் தரவு தகவல்கள் அமெரிக்காவில் உள்ள 100 பெரும் இணைதள சில்லறை வியாபாரக் கடைகளில் இருந்து பெறப்பட்டவையாகும். இம்முறை 40 சதவீதமான “கறுப்பு வெள்ளி” கொள்வனவுகள் கைத்தொலைப்பேசியூடு வாங்கப்பட்டன. இதுவே 2016 இல் இருந்து 20 சதவீத உயர்வு ஆகும்.

மேலும் வருகிற “சைபர் திங்கள்” (Cyber Monday) இன்னும் $6.6 பில்லியன் வரை வருமானம் வரலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. இது அண்மைக்கால அமெரிக்க வர்த்த சரித்திரத்தில் குறிப்பிடக்கூடிய வளர்ச்சி .

 

அமெரிக்க தேசிய சில்லறை வியாபாரிகள் National Retail Federation எதிர்பார்ப்பின் படி, “தாங்ஸ்கிவிங்” வார விடுமுறை “பிளாக் பிரைடே”, “சைபர்” உட்பட 5 நாட்களில் ஏறத்தாள 164 மில்லியன் அமெரிக்கர் விழுபடிச் சலுகைகளுடன் பண்டம் வாங்கப் போவார்களாம்.

2017 இறுதி வருட பண்டிகை வார விடுமுறை காலத்தை யொட்டி சாதாரண கடைக்காரர்களும் தமது கட்டங்களில் யன்னல் அலங்காரங்கள் மாத்திரமல்லாது, பாரியளவில் மின்-இணைய வர்த்தக வேலைகளிலும், மேலும் கொள்வனவு செய்யப்பட்ட பண்டங்களை அதி விரைவில் வாடிக்கையாளர் முகவரிகளுக்கு அனுப்புவதிலும் முதலீடு செய்துள்ளனர். மேலும் விழுபடிச் சலுகைகளை விடுமுறை காலத்தில் மாத்திரம் கொடுக்கவும், அதே சமயம் விற்பனைக்கு அதிக பண்டங்களைச் சேகரித்து வைப்பதையும் இம்முறை தவிர்த்துக் கொண்டனர். இதன் தலையாய காரணம் பின்னர் 2018 முதல் காலாண்டில் விற்க முடியாத பண்டங்களை நஷ்டத்தில் விற்காது இருப்பதேயாகும். இந்தக் கடைப்பிடிப்பின் பலன் 2018 இல் தான் முழுவதும் தெரிய வரும்.

மினசோட்டா வர்த்தக தாபனங்கள் – வாடிக்கையாளர் வரவழைப்பு முயற்சி

பெஸ்ட் பை ( Best Buy )

இவ்வருடம் புதிய தொலைக்காட்சிச் சாதனம் விற்பனையில் “பெஸ்ட் பை” தள்ளுபடி சலுகைகளில் முன்னிற்கிறதாம். சில 50 “ மற்றும் 55 “ LED 4 K சாதனங்கள் & 220 – $ 320 வரை சலுகை கொடுத்துப் போட்டி போடுகிறதாம். இவை தமது கடைகளுக்கு வரும் நுகர்வோர்க்கு மாத்திரம் தானாம்.

ரார்கட் ( Target )
வருட வருமானத்தில் சற்றுப் பின் தங்கியுள்ளினும் , இவ்வருடம் X-Box One S. 500 GB போன்ற விளையாட்டுப் பொருட்களை $189.99 யில் இருந்து $90.00 தள்ளுபடி கொடுத்து, அத்துடன் $25 கிப்ட் கார்ட் கொடுத்து வாடிக்கையாளரை வரவழைக்க முனைகிறது.

இம்முறை 2017 இல் தொலைக்காட்சிச் சாதனங்கள், மடிக் கணனிகள் ( Laptop ), மற்றும் கணனி கன்சோல் விளையாட்டுச் சாதனங்கள் பெரும் தள்ளுபடிகளுடன் விற்கப்பட்டனவாம்.

இது அமெரிக்க நுகர்வோர் மனப்பாங்கு சென்ற வருடத்திலும் சற்று திடமாகியுள்ளதாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அமெரிக்க உழைப்பாளிகள் சந்தை வேலைச் சம்பளம் பெரிதாக உயராவிடினும், படிப்படியாக வேலை வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது. இது வீடு வாங்குதல், மற்றும் பங்குச் சந்தை விலைகளையும் பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னர், ஒப்பீட்டளவில் உயர்ந்துள்ளன எனலாம்.

தொகுப்பு – ஊர்க்குருவி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad