நிலாவில் உலாவும் மான் விழியே
கலையழகு மிக்க கயல்விழியே
குலையாத காதல் கொண்டேன் அழகியே
நிலையாக வாராமல் ஓடி ஒளிவதேன்
அலையாக வந்து மோதிச் செல்கிறாய்!
தேடவே கிடைக்கா தெள்ளமுதே
நாடவே செய்திடும் உன் அழகு
கோடான கோடி மக்களின் பேரழகி!
பாடவே வைக்கிறாய் கவிஎழுதி!
நிலாவில் உலாவும் மான் விழியே
நிம்மதி தேடி அலைய வைக்காதே
நினைவிலும் கனவிலும் உன் முகமே
நிறைந்திடும் நீவந்தால் என் அகமே!
கருகான பயிர்போல் நான் வாடுறேன்
உருகாத மனம்போல் நீ நடிக்கிறாய்
அர்த்தமற்ற கோபம் இனியும் உனக்கேனடி
குற்றமற்ற என்னைத் துணை சேரடி
பட்டதெல்லாம் போதும் வந்து விடு இனி
தொட்டதெல்லாம் வெற்றிதான் நம்பி விடு
மனமொத்த காதல் மகிழ்ச்சி அளிக்கும்
இனமென்ன பணமென்ன குணமே நிறைவளிக்கும்!!!
– சரஸ்வதி ராசேந்திரன்