\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆண்டாள் கல்யாணம் 2018

ஜனவரி 13ம் தேதி 2018  அன்று மினசோட்டாவில்   உள்ள  S V கோவிலில் ஆண்டாள் கல்யாண விழா சடங்கு, நடனம் பாட்டு போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டாள் (கோதை) ரங்கநாதரை மார்கழி மாதம் கடைசி நாள் மணமுடிப்பதாக சம்பிராதயம். இந்த விழாவை மனிதர்கள் திருமன விழா போல் சிறப்பாக நடத்தினார்கள்.

மார்கழி மஹோத்சவம் 2017-18 ஒரு பகுதியாக மினசோட்டா  தேவகணம்  அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை கடந்த மூன்றாண்டாக    மினசோட்டா  தேவகணம் அமைப்பு சார்பில் “ட்வின் சிட்டி”யில்   உள்ள பக்த கோடியின் வீடுகளின் மார்களி மஹோத்சவம் உற்சாவ கல்யான  சடங்கு நடத்தினார்கள். கடைசி நாள் விழாவை சிறப்பாக S V கோவிலில் நடத்தினார்கள்.

முதல் நிகழ்ச்சியாக தரங்கிணி நடன பள்ளி  குழந்தைகள் (அவ்னி மோடி, நேஹா நந்தகுமார், விஷாலி அழகப்பன், ஜஹனாவி சுரேஷ், அக்சய சோமசுந்தரம், ஆராதனா செல்வகுமார், சேஷா பேரம், ஜெய்ஸ்ரீ வேல்முருகன், அதிதி கௌசிகன், ராமச்சந்திரன் ஆத்தூர் பாலாஜி, ஸ்ரீ கீர்த்தி   ஆத்தூர் பாலாஜி, அனன்யா சோமசுந்தரம்)   நடனம் ஆடி விழாவை ஆரம்பித்தனர். இதை தொடர்ந்து கோவில்  தலைமை அர்ச்சகர்  சேஷாத்திரி ஸ்வாமி மற்றும் வம்ஷி ஸ்வாமி , பவன் ஸ்வாமி சாமியின் சிறப்பு அழங்காரத்தை அர்ச்சகர் ராம் கிஷோர் ஸ்வாமி சிறப்பு வழிப்பாடு நடத்தினார்கள். மினசோட்டா  தேவகணம்  குழு பாட்டு பாடி (கோபால் ஆச்சார்யா (மிருதங்கம்), தீபிகா விஜய் நரசிம்மன் (வயலின்), ஹாரிணீ சௌம்யநாராயணன் , பிரியா மஹதி , த்ரீடி ராயதுர்கம், பிரதீஷா, பவித்ரா நரசிம்மன், ராமச்சந்திரன், ஸ்ரீகீதி பாலாஜி, நிதிஷ், மிதிலா ஐயங்கார், சுகன்யா வெங்கட், பவித்ரா ராமகிருஷ்ணன் ,  நப்பின்னை & ஹரிஷிகேஷன் கோமடம்)  மாலை மாற்றி கல்யாண விழா  நடைபெற்றது.

விழாவிற்கு வந்தவர்களுக்கு  கல்யாண பிரசாதமாக லட்டு, அப்பம்,  ஜாங்கிரி ,  திரட்டி பால்  மற்றும் உலர்ந்த பழ வகைகளும் வழங்கப்பட்டது.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Tgr says:

    Thanks for the photos.
    Very pleased to see Andal Kalyanostavam. Well organised.
    Govinda Rajan T Agaram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad