\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நீரைத் தழுவும் காற்றின் சுகம்

Filed in கவிதை, வார வெளியீடு by on February 11, 2018 0 Comments

நீரைத் தழுவும் காற்றின் சுகம்

நெடுங்கோண இதழ்களால்

சுட்டி நிற்கும்

பிஞ்சுக் குழந்தையின்

சிற்றொலி…

இலவம் பாதம்

நெகிழும் காற்றின் புல்வெளி …

காலசைத்த

புது உயிரின்

விட்டம் பார்க்கும்

சுட்டுவிழி….

எல்லாமாய் இயங்கும்

புதிய சூரியனை

கரங்களில் ஏந்துதல்

உலகின் அப்பாக்களுக்கு

நீரைத் தழுவும் காற்றின் சுகம்.

முனைவர் சு.விமல்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad