குளிரில் வெப்பக் காற்று பலூன் பயணம் 2018
குளிர்காலம் என்றாலே நமக்கு நினைவு வருவது மங்கி குல்லா, கம்பளி போர்வை ஆனால் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்தில் ஹட்ஸன் என்ற நகரில், குளிர்காலத்தில், வெப்பக் காற்று பலூன் நிகழ்வை 29 ஆவது வருடமாக நடத்துகிறார்கள். ஜனவரி மாதக் கடைசியில் இரு தின விழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இவ்விழாவில் உள்ளுர் வியாபார நிறுவனங்களின் கண்காட்சியும், தள்ளுபடி விற்பனையும் இடம்பெற்றிருந்தது. இது போக காற்று பலூனின் இயந்திரத்தை மட்டும் பள்ளி மைதானத்தில் வைத்து அதன் செயல்முறை விளக்கத்தை அளித்தனர்.
இந்த விழாவின்போது சுமார் 30 பலூன்களில் பல பயணிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பயணம் செய்தனர். பொதுவாகவே மினசோட்டா மற்றும் விஸ்கான்சின் மாநிலங்களில் பனிக்காலங்களில் குளிர் மிகக் கடுமையாகயிருக்கும் இந்நிலையில் வெட்டவெளியில், காற்றில் அவர்கள் இப்பலூன்களில் பறப்பதைப் பார்த்தாலே நமது உடல் சில்லிட்டுப் போகிறது!
அன்றைய தினம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக!!
-ராஜேஷ் கோவிந்தராஜன்