ஈஸ்டர் முட்டை வேட்டை திருவிழா 2018
ஈஸ்டர் என்பது இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா. இவ்விழாவை ஒட்டி நடைபெறும் ஈஸ்டர் முட்டை வேட்டை (Easter Egg hunt) குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நிகழ்வாகும்.
இந்நிகழ்வு, ஈஸ்டரை ஒட்டி அமெரிக்காவில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. (http://www.easteregghuntsandeasterevents.org/MN.php). நேற்று மினசோட்டா மாநிலத்தின். வுட்பரி நகரில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மூன்று பிரிவுகளில் பல குழந்தைகள், முட்டை வேட்டை திருவிழாவில் பங்கேற்றனர். வுட்பரி நகர அமைப்பினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
பல வண்ண பிளாஸ்டிக் முட்டைகளில், உள்ளே பரிசு பொருள்களை வைத்து பெரிய விளையாட்டு மைதானத்தில் பரப்பி இருத்தனர். ஒரே இடத்தில் பல வண்ண முட்டைகள் இருத்தும், சில குழந்தைகள் ஓரே வண்ண முட்டைகளைத் தேடி, மைதானத்தை சுற்றிச் சுற்றி வந்ததைக் காண சுவாரசியமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக.
– ராஜேஷ் கோவிந்தராஜன்