\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவித்துளிகள் சில…

 

ம்மாவின் ஓயாத இருமல்
கண்ணீராய் வெளிவரும்
ஆண்டுகள் கடந்த தாய்ப்பால்

 

*****


கோடை வெயில்
நிழலை அழித்தது
திடீர் மழை

*****


ப்பித்த சிறு பூச்சி
பேருருவாய் மேல் விழுந்தது
மின்விளக்கின் மேல் தஞ்சம்

*****


தென்றலின் இனிமைப் பேச்சு
விழுந்து சிரிக்கும் சருகுகள்
அச்சத்தோடு மனிதன்

*****


கன்ற கருப்புத்தாள்
கண்மூடி எழுதுகிறேன்
இரவுக் கவிதை

 

சா. கா. பாரதி ராஜா

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad