\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

விடியும் நல்ல நாளை

விளம்பி  வருடம் வரும் நேரம்

விளிம்பில் வெதும்பி நிற்கிறது தமிழகம்!

விரும்பியோ விரும்பாமலோ தமிழ் எனது விலாசம்

விருந்தினரை வந்தாரை வாழவைப்பது எம் கலாச்சாரம்!

 

விளம்பரத்திற்காக இந்தியனை வேற்றுமைபடுத்தி

வீண் கலகம் செய்து  விஷத்தை கக்கும்

விஷமிகளின் வஞ்சனை வலையில் வீழ்ந்து

விந்தைகாரர்களின்  வசீகரத்தில் கட்டுண்டுக் கெட்டது!

 

வினோதமாய் அன்னியமானது என் தமிழகம் இன்று!

வீறுகொண்ட தன்னலமற்ற தலைவனைத் தேடுகிறது

விவேகமான விவேகானந்தரின் இளைஞனுக்கு ஏங்குகிறது!

வித்திட்டவரல்லவா நாம்? நாகரீகத்துக்கு வித்திட்டவரல்லவா நாம்

 

விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் பிறந்த மண்ணல்லவா இது

விலாசம் மாறலாம்; விசுவாசம் மாறலாம்; மனிதநேயம் மாறலாமா ?

 

வீழாதே எழுந்திரு

விடியும் நல்ல நாளை…

விலகும் இந்த மாயை!

விமோசனம் பிறக்கும்

வையகமே வியக்கும்!!

  • சுதா ஸ்ரீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad