உலக நாடுகளின் கலாச்சாரத் திருவிழா (Festival of Nations)
ஒவ்வொரு வருடமும் செயிண்ட் பால் ரிவர் செண்டரில் நடைபெறும் ‘ஃபெஸ்டிவல் ஃஆப் நேஷன்ஸ்’ (Festival of Nations) என்னும் பல்வேறு நாட்டு மக்களின் திருவிழா, இந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதியில் இருந்து 6 ஆம் தேதிவரை நடைபெற்றது. வெவ்வேறு நாட்டு மக்களின் உடை, உணவு, கலை சார்ந்த கலாச்சாரங்களை இங்கு ஒரே இடத்தில் ஒரு கதம்பமாகக் காணும் வாய்ப்பு பார்வையாளர்களுக்குக் கிடைத்தது. இந்த விழா கடந்த 86 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஃஆப் மினசோட்டா’ என்ற அமைப்பு, பிற உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து இந்த விழாவை நடத்தி வருகிறது.
பிற நாட்டுக் கலைகளுடன், தமிழ்நாட்டு கலைகளான மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், நாட்டுபுற நடனம் போன்றவைகளை இங்குக் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்பதிவில் காணலாம்.
முந்தைய ஆண்டு நிகழ்வுகளின் புகைப்படங்கள், கீழுள்ள இணைப்பில் காணக்கிடைக்கின்றன.
- சரவணகுமரன்