\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காதல்

அந்தி சாயும் வேளையிது

மல்லியின் வாசம் வருடுகிறது

தென்றல் என்னை இழுக்கிறது

காதலன்  வரவிற்காக  ஏங்குகிறது …!

 

சோலைக்குயில் கூவும் நேரமிது

உறைபனியின் நடுக்கம் குறைகிறது

பால்நிலவு அவளால் எரிகிறது

கண்ணாளனை நோக்கியே காலம் கனிகிறது..!

 

காதலில்  இன்பம் பொங்குகிறது

மோகத்தின் வேதனை பொங்குகிறது

இதழில் கவியெழுதத் துடிக்கிறது

காதலனின் நெஞ்சில்  சாய்ந்திடத் துடிக்கிறது …!

 

மோகத்தின் உச்சத்தில் உறைகிறது மனம்

இன்பத்தின் லயத்தில் லயிக்கிறது

இரவின் நீலத்தை வேண்டுகிறது

காதலனின் வரவை மனம்ஏனோ நாடுகிறது

அந்தி சாயும் வேளையிலே …!!

  • உமையாள்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad