\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எனைப் பெத்தவளே …!!

இருட்டு அறையின்

இதயத் துடிப்பில்

இன்பமாய் உறங்கினேன்

இனி வேண்டினாலும்  கிடைக்குமோ ..!

 

கண்ணிமைக்கும் நொடியிலும்

கண்ணிமைக்காது காத்தவள்

காத்துக்கறுப்பு அடிச்சுடும்னு

கண்ணுக்குள்ளே  குலசாமியா காத்தவளே ..!

 

அமுதளித்த அன்னபூரணியான

அன்னையின் மடியில்

அந்திப்பொழுதில் தலைசாய்க்கையில்

அகிலமெல்லாம் நிறைஞ்சவளே ..!

 

உறவுகளின் பாலமானவளும்

உன்னதத்தின் மகத்துவத்தை

உள்ளத்தில் திரைகடலோவியமாய்

உயிர்களின் உயிராய்க் காத்தவளே ..!

 

எனைப் பெத்தவளே ..!!

நீ ஆண்டு நூறு வாழவேணும் …!!

எனைப் பெத்த மகராசி ..!!

  • உமையாள்

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad