காலா சொல்லும் பத்துப் பாடங்கள்
இது காலா படத்தில் சொன்ன பாடங்கள் அல்ல. காலாவைச் சுற்றி நடப்பதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்,
- தெரியாத விஷயங்களில் தலையை நுழைக்காதே – இந்தப் படத்திற்காகத் தான் ரஜினி தூத்துக்குடி சென்றிருப்பாரென்றால் அது முட்டாள்த்தனமான முடிவு என்று ரஜினியே இப்போது அறிந்திருப்பார். அதனால் இருந்த இமேஜும் டேமேஜ் ஆனது தான் மிச்சம்.
- சினிமாவும் ரியலும் வேறு – இது ரஜினி ஒத்துக்கொண்ட விஷயம். ரஜினி படத்தில் பேசுவதை அவர் கருத்து என்று எடுக்கக் கூடாது. அவர் கருத்து என்பது அவர் பொதுவெளியில் சொல்வது தான். படத்தில் உள்ளது, இயக்குனரின் குரல்.
- உன்னால் முடிந்த வரை முயற்சி செய் – படத்தை கர்நாடகாவில் வெளியிட பிரச்சினை என்றதும் பேச்சுவார்த்தை, வேண்டுகோள், நீதிமன்ற வழக்கு என்று தங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தனர். முயற்சி வீண் போகவில்லை.
- கன்டென்ட் இஸ் கிங் – இந்தப் படத்திற்குப் பல பிரச்சினைகளும் எதிர்ப்புகளும் இருந்தன.அந்த நேரத்தில் ரஜினி சொன்னது – “படம் நல்லாயிருந்தா ஓடும்”. அதுவே நடந்தது.
- வெற்று விளம்பரம் தேவையில்லை – ஏரோப்ளேன் விளம்பரம், பலூன் விளம்பரம் என்று எரிச்சல்படுத்த தேவையில்லை. மவுத் டாக் தான் பெரிய விளம்பரம்.
- வெற்று எதிர்ப்புகள் வேஸ்ட் – எப்படி வெற்று விளம்பரங்களால் பயன் இல்லையோ, அது போல் வெற்று எதிர்ப்புகளாலும் பயன் இல்லை. படம் வரும் வரை பார்க்காதே என்பதும், படம் வந்த பிறகு பார்த்து விட்டு நொட்டை சொல்வதும் வேஸ்ட். பார்க்கப் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதே. பார்க்க நினைத்தால் பார்.
- சூப்பர் ஸ்டார் தேவையில்லை – படம் ஹிட் ஆக சூப்பர் ஸ்டார் இமேஜ் தேவையில்லை. மாஸ் என்ட்ரி தேவையில்லை. இன்ட்ரோ சாங் தேவையில்லை, பஞ்ச் பயலாக்ஸ் தேவையில்லை. இயல்பே சிறப்பு.
- உன் வழியில் எதிர் – உனக்குத் தெரிந்த மொழியில் எதிர்ப்பைக் காட்டு. இரஞ்சித் தனது கருத்தியலை தன் திரைமொழியில் சொல்லும் போது, அதன் ரீச்சும் பலமாக இருக்கும். பரவலாக இருக்கும்.
- எதிர்ப்பில் நேர்மை – ஒரு விஷயத்தை எதிர்க்கும் போது நேர்மையுடன் எதிர்க்க வேண்டும். முகநூலில் நேரலை செய்வதோ, தமிழ் ராக்கர்ஸில் பார்ப்பேன் என்று சொல்வதோ சரியான எதிர்ப்பு அல்ல. எதிர்ப்பின் மதிப்பைக் கெடுப்பவை.
- அடுத்த வேலையைப் பார் – படம் வந்த பிறகு ஊரே படத்தில் அது சரியில்லை, இது சூப்பர், வசூல் அப்படி என்று பேசிக் கொண்டிருக்கும் போது, ரஜினி அடுத்தப் படத்தில் நடிக்கப் போய்விட்டார். பொங்கிக்கொண்டிருப்பவர்களும் அடுத்த வேலையைப் பார்க்கச் செல்லலாம்.
- சரவணகுமரன்.
Tags: kaala, Kaala the movie, காலா, ரஜினி, ரஜினிகாந்த்